Never Stop Learning
எங்கள் ஊர்
ஈரோடு
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் ஈரோடு ஆகும். எண்ணற்ற வளங்கள் பொங்கும் இடம் ஈரோடு. மனிதநேயம் தவழும் வண்ணம் ஈரோடு அமைந்துள்ளது. அச்சிறப்புமிகு நகர் பற்றிக் காண்போம்.
அமைவிடம்:
கரூர், சேலம், கோவை ஆகியற்றுக்கிடையே ஈரோடு நகர் அமைந்துள்ளது. காடுகளும் வயல்களும் சூழ்ந்து நடுவினில் இயற்கை அழகு தவழும் வண்ணம் ஈரோடு அமைந்து உள்ளது. காவிரி ஆறு பாயும் புண்ணிய பூமி ஈரோடு ஆகும்.
பெயர்க்காரணம்:
பிரம்மா ஐந்தாவது தலையைத் துண்டித்த போது அந்த மண்டையோடு சிவபெருமானோடு ஒட்டிக்கொண்டு பிரம்ம தோசம் பிடித்தது. அவர் தோசம் போக இந்தியா முழுவதும் நீராடினார். ஈரோட்டில் வந்து நீராடிய போது மண்டை ஓடு மூன்றாகப் பிரிந்து மூன்று இடத்தில் விழுந்தது. ஈர் (இறுதி) ஓடு விழுந்த இடம் ஈரோடு ஆயிற்று என்பர்.
தொழில்கள்:
வேளாண்மை, கைத்தறி, ஜமக்காளம், ஆடை ஆகிய தொழில்கள் ஈரோட்டில் சிறந்து விளங்கிவருகின்றது.
சிறப்புமிகு இடங்கள் :
பெரியார், அண்ணா நினைவகம், திண்டல், முருகன் கோயில், பிரப் தேவாலயம், பள்ளி பாளயம் தர்கா, வ.உ.சி பூங்கா ஆகியன ஈரோட்டில் சிறப்புமிகு இடங்களாகும்.
திருவிழாக்கள்:
மாரியம்மன், பண்ணாரி அம்மன், அறச்சாலை அம்மன் ஆகிய கோவில்களின் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை:
இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே வாழ்கிறோம்.
முடிவுரை:
நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.
எங்கள் ஊர்
திருநெல்வேலி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
அழகான எண்ணற்ற இயற்கை வளங்கள் கொண்ட எங்கள் திருநெல்வேலி. மாவீரன் புலித்தேவன் பிறந்த வீர மண்ணைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம் :
வற்றாத நதியான தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது திருநெல்வேலி.
பெயர்க்காரணம் :
ஓர் சிவபக்தன் இறைவனுக்கு படைக்க நெல்லைக் காய வைத்திருக்கும் போது, திடீரென மழை பெய்ய சிவபெருமான் அந்த நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் இது திருநெல்வேலி என்று அழைக்கப்படுகிறது.
தொழில்கள்:
எங்கள் ஊர் உழவுத்தொழிலுக்கும் அல்வாக்கும் பெயர் பெற்றது. மேலும் பாய்
பின்னுதல், அப்பளம் தயாரித்தல், பனை சார் தொழில்களும் இங்கு சிறந்து விளங்குகின்றது.
சிறப்பு மிகு இடங்கள் :
குற்றாலம், அகத்தியர் அருவி, நெல்லையப்பர் கோவில், மணிமுத்தாறு அணை, முண்டந்துறை புலி காப்பகம் ஆகியவை சிறப்புமிக்க இடங்கள்.
திருவிழாக்கள்:
நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழாவும் பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவும் மிக பிரசித்தி பெற்றது.
மக்கள் ஒற்றுமை:
இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே வாழ்கிறோம்.
முடிவுரை:
பராம்பரியம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த திருநெல்வேலியில் வாழ்வது எனக்கு பெருமை
எங்கள் ஊர்
காஞ்சிபுரம்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
எங்கள் ஊர் காஞ்சிபுரம். இது இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்றாகும். பல்லவர்களின் தலைநகரம் என்ற பெருமைக்குரிய ஊராகும்.
அமைவிடம் :
காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.
பெயர்க்காரணம்:
கா என்றால் பிரம்மன் அஞ்சித்தல் என்றால் பூசித்தல், புரம் என்றால் நகரம் என்பது பொருள். பிரம்மன் பூசித்த நகரம் ,ஆதலால் காஞ்சிபுரம் ஆயிற்று என்று வரலாறு கூறுகிறது.
தொழில்கள் :
காஞ்சிபுரம் கோவில் நகரம் என்றும் பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு முதன்மைத் தொழிலாகப் பட்டு நெசவு நடைபெறுகிறது. காஞ்சிப்பட்டு உலகப் புகழ் பெற்றதாகும். வேளாண்மையிலும் சிறந்து விளங்குகிறது.
சிறப்புமிகு இடங்கள்:
காஞ்சிபுரம் முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாகும். இங்கு கைலாசநாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் எனப் பல கோவில்கள் உள்ளன.
திருவிழாக்கள்:
காஞ்சிபுரத்தில் திருவிழா நமைபெறாத நாட்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நாள்தோறும் விழாக்கள் நடைபெறும்.அத்திவரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு நாற்பத்தெட்டு நாள்கள் காட்சியளிப்பார்.
மக்கள் ஒற்றுமை:
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுப்பட்டு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
முடிவுரை:
"எங்கள் கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து இங்குள்ள கடவுள்களை வழிபட்டு நன்மை அடையுங்கள்.
எங்கள் ஊர்
சென்னை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
எங்கள் ஊர் சென்னை. தமிழகத்தின் தலைநகரமான சிங்காரச் சென்னையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:
சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. சென்னை இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் ஆகும்.
பெயர்க்காரணம்:
சென்னியப்பர் என்பவரிடமிருந்து இப்பகுதியை விலைக்கு வாங்கி வெள்ளையர்கள் நிலைப்படுத்திக் கொண்டார்கள். அதனால் தான் சென்னி சென்னையாக அழைக்கப்படுகிறது.
தொழில்கள்:
சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில் நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. கடற்கரையும் துறைமுகமும் கொண்ட வணிக நகரம். பல பொருட்கள் இங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன.
சிறப்பு மிகு இடங்கள் :
மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, வள்ளுவர் கோட்டம், அரசு அருங்காட்சியகம், முட்டுக்காடு படகுக் குழாம், பிர்லா கோளரங்கம் மற்றும் பல தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவைகள் சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:
சென்னையில் எண்ணற்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மக்கள் அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்களில் மிக சிறப்பாக திருவிழாக்கள் நடத்துவார்கள்.
மக்கள் ஒற்றுமை:
சென்னை மாநகரில் வாழ் மக்கள் பல ஊர்களில் இருந்து வந்தவர்களாயினும் அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
முடிவுரை:
தமிழகத்தின் இதயமான சென்னையின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.
எங்கள் ஊர்
மதுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
எங்கள் ஊர் மதுரை. தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரமான மதுரையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:
வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
பெயர்க் காரணம்:
சிவபெருமான் தனது தலை முடியிலிருந்து சில தேன் துளிகளை இந்த நகரின் மீது தூவினார். இதையடுத்து குலசேகர பாண்டிய மன்னன் இந்நகருக்கு மதுராபுரி என்று பெயர் சூட்டினார். மதுரம் என்றால் இனிமை. காலப்போக்கில் மதுரையாக மாறிவிட்டது.
தொழில்கள் :
மதுரையில் பெரிய நூற்பாலைகளும், சிறிய நெசவாலைகளும் இருக்கின்றன. மதுரை வணிக வளமும் தொழிற் சிறப்பும் பெற்று விளங்குகிறது.
சிறப்பு மிகு இடங்கள் :
மீனாட்சி அம்மன் கோவில் திருமலை நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம், காந்தி பொருட்காட்சி நிலையம், இராசாசி குழந்தைகள் பூங்கா, வைகை அணை உள்ளிட்டவைகள் சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:
சித்திரை திருவிழாவும், தைப்பூசத் தெப்பத் திருவிழாவும் ஆயிரக்கணக்கானவர் மனதைக் கவரும் பெரு விழாக்களாகும்.
மக்கள் ஒற்றுமை:
மதுரை மாநகரில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். அனைவரும் அமைதியாய் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்.
முடிவுரை:
பண்பாட்டுத் தலைநகரமா மதுரையின் இக் கலைச்சிறப்பிற்குக் காரணமான திருமலை நாயக்கரைப் போற்றிப் புகழ்வதும் மதுரையை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.
எங்கள் ஊர்
கோயம்புத்தூர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
எங்கள் ஊர் கோயம்புத்தூர், கொங்கு நாட்டின் தலைநகரம் என கருதப்படும். கோவையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:
கோயம்புத்தூர் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக கோவை என்று என்று அழைக்கப்படுகிறது.
பெயர்க்காரணம்:
இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால் கோசர்புத்தூர்-> கோசம்புத்தூர்-> கோயம்புத்தூர் எனப் பெயர் வந்திருக்கலாம். கருதப்படுகிறது.
தொழில்கள்:
இங்கு தரமான பருத்தி மற்றும் ஜவுளி பெரிய அளவில் உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மென்பொருள் உற்பத்தியிலும், தண்ணீர் பம்ப் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது.
சிறப்பு மிகு இடங்கள் :
ஆதியோகி சிவன் சிலை, ஜிடி நாயுடு அருங்காட்சியகம், வெள்ளியங்கிரி மலைகள், கோவை குற்றாலம் அருவி, குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் பல தனியார் பூங்காக்கள் உள்ளிட்டவைகள் சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:
ஸ்ரீ கோனியம்மன் கோயில் திருவிழா, அரங்கநாதர் கோயில் விழா, அந்தோணியார் தேவாலயத் தேர் திருவிழா மற்றும் ஈஷா யோக மையத்தில் நடக்கும் மறாசிவராத்திரி இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை:
கோவை மாநகரில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். அனைவரும் அமைதியாய் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்.
முடிவுரை:
ஒருபுறம் பரந்து விரிந்த நகரம் மறுபுறம் அழகு நிறைந்த இயற்கை கொண்ட கோயம்புத்தூரில் வாழ்வது எனக்கு பெருமை.
எங்கள் ஊர்
திருச்சி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை
எங்கள் ஊர் திருச்சிராப்பள்ளி, மலைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்
தமிழ்நாடு மாநிலத்தின் மையப்பகுதியில், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது திருச்சி மாநகரம்.
பெயர்க்காரணம்
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள குகையில் 'சிரா என்னும் சமணத் துறவி தவம் செய்தார். சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி திருச்சிராப்பள்ளி என்று பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தொழில்கள்
நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலை, எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழிற்சாலை, பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கு காணலாம்.
சிறப்பு மிகு இடங்கள்
திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், இராணி மங்கம்மாள் கொலு மண்டபம், கல்லணை, முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி விழா, மிதவை திருவிழா, சமயயுரம் மாரியம்மன் திருவிழா மற்றும் ஆடிப்பெருக்கு விழா இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை
எந்த மதச் சண்டையும் சாதிக் கலவரமும் நடக்காத தமிழ்நாட்டின் ஒரே பெருநகரம் திருச்சிதான். ஆயிரம் உண்டு இங்குச் சாதி அதனால் என்ன, அமைதியாய் வாழ்வோம் என்று திருச்சி மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
முடிவுரை
பல பாரம்பரியம் கொண்ட தொன்மையான எனது ஊரைப் பாதுகாப்பது எங்களது கடமையாகும்
எங்கள் ஊர்
சேலம்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
எங்கள் ஊர் சேலம். மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் சேலம் நகரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:
தென்னிந்திய மாநிலமான சேலம் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது. மலைகளால் சூழப்பட்ட அழகிய நகரம்.
பெயர்க்காரணம்:
சேரலம் என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள "சாலிய சேரமண்டலம்" என்ற தொடரை ஆதாரமாகக் கூறுவர். சேரவரையன் மலையும் இதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது.
தொழில்கள்:
சேலத்தின் பொருளாதாரம், விவசாயம் மற்றும் நெசவுத்தொழில் சார்ந்து உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும்.
சிறப்பு மிகு இடங்கள்:
ஏற்காடு, மேட்டூர் அணை, சேலம் உருக்காலை தாரமங்கலம் கோவில், சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:
கோட்டை மாரியம்மன் திருவிழா, மலையாளி கோவில் விழா, ஆடிப்பெருக்கு விழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை:
சேலம் மாநகரில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். அனைவரும் அமைதியாய் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்
முடிவுரை:
புவியியலாளர்களின் சொர்க்கமான சேலம் மாநகரில் நம் பண்டைய தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டுள்ளது. இதனை பாதுகாப்பது நமது கடமையாகும்.
எங்கள் ஊர்
கோபிசெட்டிபாளையம்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் கோபிசெட்டிபாளையம் ஆகும். சின்ன கோடம்பாக்கம் அல்லது மினி கோலிவுட் என்று அழைக்கப்படும் கோபியைப் பற்றி இக்கட்டுரையின் காண்போம்.
அமைவிடம்:
இந்நகரம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்:
தற்போதுள்ள கோபிச்செட்டிபாளையம் முன்னர் வீரபாண்டி கிராமம் என்று அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால், கோபிச்செட்டிபாளையம் எனப் பெயர் பெற்றது.
தொழில்கள்:
இங்கு விவசாய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. நெல், கரும்பு, வாழை, புகையிலை மற்றும் மஞ்சள் முக்கிய பயிர்கள் ஆகும். வெண் பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது.
சிறப்பு மிகு இடங்கள்:
'கொடிவேரி அணை, பவானிசாகர் அணை, சத்தி வனவிலங்கு சரணாலயம், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பவளமலை முருகன் கோவில் முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.
மக்கள் ஒற்றுமை:
இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே வாழ்கிறோம்
முடிவுரை:
நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.
எங்கள் ஊர்
உதகமண்டலம் - ஊட்டி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:
எங்கள் ஊர் உதகமண்டலம். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:
ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகளும் மேற்கு தோடர்ச்சி மலைகளும் சங்கமிக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
பெயர்காரணம்:
உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவம் வட்ட வடிவில் இருக்கும் ஏரிகள் அங்கு ஏராளம் எனவே இப்பகுதியை உதகமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
தொழில்கள்:
ஊட்டியின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துள்ளது. ஆங்கில காய்கறிகள் மற்றும் ஆங்கில பழங்கள் இங்கு அதிகமாக விளைவிக்கின்றனர். ஊட்டியில் பால் பண்ணையும் ஒரு முக்கிய செயலாகும்.
சிறப்பு மிகு இடங்கள்:
மான் பூங்கா, அரசு அருங்காட்சியகம், முதுமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் ரோஜா பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த சில இடங்களாகும்.
திருவிழாக்கள்:
அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வருவதால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கோடை விழா, மலர் கண்காட்சி, படகு போட்டி தேயிலை திருவிழா, நாய் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சி மற்றும் உலக சுற்றுலா தின திருவிழா என பல்வேறு திருவிழாக்கள் ஏற்பாடு செய்கிறது.
மக்கள் ஒற்றுமை:
ஊட்டியில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர்.. அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்.
முடிவுரை:
இயற்கை வளமும் அரிய வகைத் தாவரங்களும் விலங்குகளும் கொண்ட ஊட்டியை காப்பது நமது கடமையாகும் .
முன்னுரை
எங்கள் ஊர் கன்னியாகுமரி. உலகப் புகழ் சுற்றுலாத் தலமாக விளங்கும் எங்கள் ஊரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்
இந்தியாவின் தென்கோடியில் வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி தேவி நின்ற முனையைக் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறது.
தொழில்கள்
இங்கு ரப்பர்,தேன், பல வகையான பூக்கள், தேங்காய், வாழை,நெற்பயிர் ஆகியவை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றும் இங்கு பனை, சிப்பி, வாழைநார் கொண்டு பல வகையான கைவினைப் பொருட்கள் செய்யும் கைத்தொழில்கள் அதிகமாக காணப்படும் .
சிறப்பு மிகு இடங்கள்
தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்திமண்டபம், திருவள்ளுவர் சிலை முதவியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும். கன்னியாகுமரி கடற்கரையில் நாள்தோறும், அதிகாலையில் சூரியோதயம் மற்றும் மாலையில் சூரிய அஸ்தமனம் காட்சிகளை பார்க்கலாம்.
திருவிழாக்கள்
குமரி திருவிழா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவிழா, எங்கள் லேடி ஆஃப ரான்சம் சர்ச் ஆண்டு திருவிழா, பீர் முகமது தர்கா திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்கள்.
மக்கள் ஒற்றுமை
கன்னியாகுமரியில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். அனைவரும் அமைதியாய் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்.
முடிவுரை
இயற்கை அழகும் அற்புதமும் ஒருங்கே அமைந்த கன்னியாகுமரியை பாதுகாப்பது நமது கடமையாகும்.
எங்கள் ஊர்
கன்னியாகுமரி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
© 2025. All rights reserved.