Bank statement letter in Tamil | bank account closing application | how to write letter to bankBank statement letter in Tamil | bank account closing application | how to write letter to bank
அனுப்புநர்
வ.லதா,
30 பொன்னகர்
தென்காசி.

பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
தென்காசி.

பொருள் : தொலைபேசி எண்ணை மாற்ற விண்ணப்பித்தல்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். நான் லதா. உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண் xxxxx. எனது வங்கி கணக்குடன் தொலைபேசி எண்ணை மாற்றக் கோருவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

பழைய தொலை பேசி எண்: YYYY.

புதிய தொலைபேசி எண் : zzz.

மேலே குறிப்பிட்டுள்ள புதிய தொலைபேசி எண்ணுக்கு குறுஞ் செய்தி (SMS) சேவையை இயக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

தென்காசி,
17.4.2024.

தங்கள் உண்மையுள்ள,
லதா.வ.
அனுப்புநர்
ச.மீனா,
12, நந்தி கோவில் தெரு,
மதுரை-3.
Ph: 9810014168.

பெறுநர்
கிளை மேலாளர்,
பாரத ஸ்டேட் வங்கி,
மதுரை.

மதிப்பிற்குரிய ஐயா /அம்மா,

பொருள்: வங்கி கணக்கில் முகவரி மாற்ற விண்ணப்பித்தல்.

வணக்கம். நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண் : 25683262. எனது வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட பழைய முகவரியிலிருந்து புதிய முகவரிக்கு மாறியுள்ளேன். எனது புதிய முகவரியை எண்: 10.. நந்தி கோவில் தெரு, மதுரை-3, எனது வங்கி கணக்குடன் புதுப்பிக்க விரும்புகிறேன். மேலே குறிப்பிட்டுள்ள வங்கி கணக்குடன் எனது முகவரியை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். வங்கிக் கணக்கில் முகவரி மாற்றத்திற்குத் தேவையான ஆவணத்தையும் [ஆதார் அட்டை] இத்துடன் இணைத்துள்ளேன்.

நன்றி.

மதுரை,
09.11.2023.
இப்படிக்கு
உண்மையுள்ள,
ச.மீனா.
அனுப்புநர்
வி.லதா,
15, விநாயகர் காலனி,
கடையம்.

பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
கடையம்.

மதிப்பிற்குரிய ஐயா /அம்மா,

பொருள்:- அடல் பென்ஷன் யோஜனா (APY) சந்தாவை ரத்து செய்தல்.

வங்கி கணக்கு எண்: YYYY

எனது APY சந்தாதாரர் ஐடிஎண்:- xxx.

வணக்கம். என் பெயர் லதா. என் வங்கி கணக்கு கடந்த இரண்டு வருடங்களாக APY சந்தாவை முறையாக செலுத்தி வந்தேன். இப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக என்னிடம் பணம் பற்றாக்குறையாக இருப்பதால், இந்த திட்டத்திற்கான தொகையை என்னால் சரிவர செலுத்த முடியவில்லை. ஆகையால் எனது APY சேர்க்கையை ரத்து செய்ய விரும்புகிறேன். எனது கோரிக்கையை ஏற்று, எனது சந்தாவை ரத்து செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

கடையம்,
11.12.2024.
இப்படிக்கு
உண்மையுள்ள,
லதா (9811111111).
அனுப்புநர்
தி. சரவணன்,
16. பிள்ளையார் கோவில் தெரு,
கடையம்.

பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
கடையம்.

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,

பொருள் :- ஏ.டி.எம் மில் பணம் வராமல், பணம் பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பாக

வணக்கம். நான் தங்கள் வங்கியில் சேமிப்பு. கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண் : 6423105010 . நான் மார்ச் 5 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஏ.டி.எம் மில் ஐந்தாயிரம் ரூபாய் [5,000 ரூ] எடுக்க முயற்சித்தேன். அப்போழுது எனது பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டது. ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக எனக்கு குறுஞ்செய்தி வந்தது. தற்போது வரை பணம் மீண்டும் வரவு வைக்கப்படவில்லை. எனவே, எனது பணத்தை மீண்டும் எனது வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

சேமிப்பு கணக்கு எண்: 6423105010
தொலைபேசி எண் 6143026611
குறிப்பு :- ஏ.டி.எம் யில் இருந்து பெறப்பட்ட ரசீதுயின் நகல்.
கடையம்,
15.03.2024.
இப்படிக்கு,
சரவணன்.
அனுப்புநர்
வ.லதா,
30, பொன்னகர்,
சேலம்.

பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
சேலம்.

பொருள் - வங்கி கணக்கை புதுப்பிக்க விண்ணப்பித்தல்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். நான் லதா. உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண் XXXX. தற்போது எனது வங்கி கணக்கு செயலற்றதாகக் குறிக்கப்பட்டுள்ளது. நான் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் / வெளியூரில் இருந்ததால் என்னால் எந்த பரிவர்த்தனையும் செய்யமுடியவில்லை. இப்பொழுது எனக்கு உங்கள் வங்கியின் சேவை தேவைப்படுகிறது. அதனால். என்னுடைய வங்கி கணக்கை புதுப்பித்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

சேலம்,
3.05.2024.
உங்கள் உண்மையுள்ள,
வ.லதா.
[தொலைபேசி எண்]
புதிய ஏடிஎம் கார்டு வேண்டி விண்ணப்பித்தல்
அனுப்புநர்
வ.லதா,
15, கங்கை தெரு,
வீரவநல்லூர்.

பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
கரூர் வைஸ்யா வங்கி,
வீரவநல்லூர்.

பொருள்: ஏ . டி. எம் கார்டு பெறுதல் தொடர்பாக விண்ணப்பித்தல்.

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,

வணக்கம் . நான் லதா. உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன்.எனது கணக்கு எண்: xxxx. நான் வங்கி கணக்கைத் திறக்கும் போது ஏடிஎம் கார்டை பெறவில்லை. ஆனால் தற்போது ஆன்லைன் மூலம் வங்கி சேவைகள் பெறவும் கட்டணம் செலுத்தவும் ஏடிஎம் கார்டு தேவைப்படுகிறது. எனவே, எனக்கு ஏடிஎம் கார்டு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

எனது கணக்கு விவரங்கள் :-
பெயர் : வ.லதா
கணக்கு எண் : XXXX
தொலைபேசி எண்: YYYY

வீரவநல்லூர்,
22.03 2024.
தங்கள் உண்மையுள்ள,
வ.லதா
அனுப்புநர்
க.லதா,
30, பொன்னகர்,
சேலம்.

பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
கனரா வங்கி,
சேலம்.

பொருள் -வங்கி கணக்கை முடிக்கக்கோரி விண்ணப்பித்தல்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். நான் லதா. உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண் Xxxxx, தனிப்பட்ட காரணத்தால் எனது வங்கி கணக்கை முறையாக பராமரிக்க முடியவில்லை. அதனால் வங்கி கணக்கை முடிக்கக்கோரி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

சேலம்,
02.05.2021.

தங்கள் உண்மையுள்ள,
க.லதா.
தொலைபேசி எண்: 9800000011
அனுப்புநர்
வ.லதா,
15.கங்கை தெரு,
ஆம்பூர்.

பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
கரூர் வைஸ்யா வங்கி,
ஆம்பூர்.

பொருள்:-ஏ.டி.எம் கார்டு பெறுதல் தொடர்பாக விண்ணப்பித்தல்.

மதிப்பிற்குரிய ஐயா /அம்மா,

வணக்கம் . நான் வதா, உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன் நேற்று எனது ஏ.டி.எம் கார்டு தொலைந்துவிட்டது. அதன் மூலம் எந்தவொரு மோசடி செயல் நடப்பதற்கு முன் அதை தயவு செய்து செயலிழக்க செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், மற்றும் எனக்கு புதிய ஏடி எம் கார்டு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புதிய ஏ.டிஎம் கார்டு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன் நன்றி.

வங்கி கணக்கு எண்:- 62743210054 தொலைபேசி எண் :- 1234567890

ஆம்பூர்,
15.3.2024.
இப்படிக்கு
உண்மையுள்ள,
லதா.

Reference tags:

Tamil kaditham | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | வங்கி கடிதம் எழுதும் முறை | வங்கி கடிதம் எழுதுவது எப்படி | bank statememt letter in tamil | bank letter writing tamil | bank address change application

Reference Videos: