எங்கள் ஊர்
தர்மபுரி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை

எங்கள் ஊர் தர்மபுரி. தன் பெயரோடு தர்மம் வைத்திருக்கும் எங்கள் ஊரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அமைவிடம்

தர்மபுரி தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையில், கிழக்கு தொடர்ச்சி மலைகளின் பக்கத்தில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

தர்மபுரி சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் தர்மபுரி என்று மாறியது.

தொழில்கள்

விவசாயம் இங்கு முக்கியமான தொழிலாக விளங்குகிறது. கம்பு, கேழ்வரகு,சாமை போன்ற சிறுதானியங்கள், பருத்தி எள், வேர்கடலை போன்றவை இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

சிறப்பு மிகு இடங்கள்

தர்மபுரி கோட்டை கோவில், அதியமான் கோட்டம், கால பைரவர் கோவில், தீர்த்த மலை, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதவியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.

திருவிழாக்கள்

தீர்த்தமலை கோவில் திருவிழா, கால பைரவர் கோவில் பூஜைகள், காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்கள்.

மக்கள் ஒற்றுமை

தர்மபுரியில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். அனைவரும் அமைதியாய் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம் .

முடிவுரை

'ஒளவையார், அதியமான் நெடுமான் அஞ்சி, சுப்பிரமணியன் சிவா, இராஜாஜி போன்றவர்கள். வாழ்ந்த தர்மபுரியை பாதுகாப்பது நமது கடமையாகும்.

எங்கள் ஊர்
இளம்பிள்ளை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை

எங்கள் ஊர் இளம்பிள்ளை. ஏழைகளின் பட்டு சாம்ராஜ்யமான எங்கள் ஊரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அமைவிடம்

இளம்பிள்ளை சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியானது கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

காலாங்கி நாதர் என்னும் கிழவர் திரு மூலருக்கு சீடராக இருந்தார். அவர் காட்டில், தன் குருவுக்கு உணவு செய்து கொண்டிருந்தார். அப்போது உணவு கருகக்கூடாது என்று காட்டில் கீழே இருந்த குச்சியை எடுத்து உணவை கிண்டினார். ஆனால் உணவு கருகிவிட்டது. தன் குருவுக்கு புது உணவு செய்துவிட்டு, இவர் கருகிய உணவை உண்டார். அதனை உண்டுமுடித்ததும் கிழவரான காலாங்கிநாதர் இளம்பிள்ளையாக மாறிவிட்டார். அவ்வாறு அவர் உருமாறிய இடமே இளம்பிள்ளை என்னும் ஊர் ஆகும்.

தொழில்கள்

இளம்பிள்ளையின் பொருளாதாரம் முக்கியமாக ஜவுளித் தொழிலைச் சார்ந்துள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை சந்தைப்படுத்துவதற்கான மையமாக இது செயல்படுகிறது.

சிறப்பு மிகு இடங்கள்

கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவில், சௌடேஸ்வரியம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் முதவிய சிறப்பு மிகு இடங்களாகும்.

திருவிழாக்கள்

ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, சுப்ரமணிய சுவாமி கோவில் திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். திருவிழாக்கள்.

மக்கள் ஒற்றுமை

இளம்பிள்ளையில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். அனைவரும் அமைதியாய் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்.

முடிவுரை

விரைவில் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்றான இளம்பிள்ளையை பாதுகாப்பது நமது கடமையாகும்.

எங்கள் ஊர்
கொடைக்கானல்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை

எங்கள் ஊர் கொடைக்கானல். மலைகளின் இளவரசி" என்று அழைக்கப்படும் எங்கள் ஊரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அமைவிடம்

கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையின் பழனி மலையில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

கொடைக்கானல் = கொடை+ கானல், கொடை என்றால் பரிசு மற்றும் கானல் என்றால் காடு. காட்டின் பரிசு என்று கருதபடுவதால் இவ்விடம் கொடைக்கானல் என்று அழைக்கப்படுகிறது.

தொழில்கள்

கொடைக்கானலின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் சுற்றுலாவைச் சார்ந்துள்ளது. கேரட், பிளம்ஸ், காலிஃபிளவர், முட்டைகோஸ், பூண்டு போன்றவை இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.

சிறப்பு மிகு இடங்கள்

கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பார்க் தூண் பாறைகள், கோக்கர்ஸ் வாக், குணாகுகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, குறிஞ்சி ஆண்டவர் கோவில் முதலியவை சிறப்பு மிகு இடங்களாகும்.

திருவிழாக்கள்

கொடைக்கானலில் சேத்தாண்டி திருவிழா, பூம்பாறை கோவில் தேரோட்ட திருவிழா, அருள்மிகு காளியம்மன் திருவிழா, மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க கோடை திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்கள்.

மக்கள் ஒற்றுமை

கொடைக்கானலில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். அனைவரும் அமைதியாய் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்.

முடிவுரை

இயற்கை அழகும், வளமிக்க காடுகள் சூழ்ந்துள்ள கொடைக்கானலைப் பாதுகாப்பது நமது கடமையாகும்..

எங்கள் ஊர்
கும்பகோணம்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை

எங்கள் ஊர் கும்பகோணம். கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் எங்கள் ஊரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அமைவிடம்

கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரமானது காவேரி மற்றும் அரசலாறு என்னும் இரண்டு ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.

பெயர்க்காரணம்

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கு இணங்கி இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடம் இந்நகரமே. ஆகையால் இந்நகரம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

தொழில்கள்

கும்பகோணம் வெற்றிலை மற்றும் பாக்கு தயாரிப்பதில் முன்னனி வகிக்கிறது. இங்கு பித்தளை, வெண்கலம், தாமிரம் பாத்திரங்கள், பட்டு பருத்தி துணி, சக்கரை மற்றும் மட்பாண்டங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.

சிறப்பு மிக இடங்கள்

ஐராவதேஸ்வரர் கோவில், நாகேஸ்வரன் கோவில், ஆதிகும்பேஸ்வரர் கோவில், ஸ்ரீ பிரம்மா கோவில், மகாமகம் தொட்டி முதலியவை சிறப்பு மிகு இடங்களாகும்.

திருவிழாக்கள்

மாசி மகத் திருவிழா, சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா, சாரங்கபாணி கோவில் தேர் திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்கள்.

மக்கள் ஒற்றுமை

கும்பகோணத்தில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். அனைவரும் அமைதியாய் ஒற்றுமையாக வாழ்வதைக் காணலாம்.

முடிவுரை

'இந்து கலாச்சாரத்தின் முக்கிய மையமாக இருக்கும் கும்பகோணத்தை பாதுகாப்பது நமது கடமையாகும்.

எங்கள் ஊர்
தூத்துக்குடி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:

எங்கள் ஊர் தூத்துக்குடி 'திருமந்திரநகர்' மற்றும் 'முத்துநகர்' என்று இரண்டு சிறப்பு பெயர்கள் கொண்ட தூத்துக்குடியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அமைவிடம் :

தூத்துக்குடி நகரம் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்:

நீர் நிறைந்த நிலத்தை தூத்து, துறைமுகமும். குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று.

தொழில்கள் :

உப்புத் தொட்டிகள் நகரின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. மீன் பிடித்தல், விவசாயம் மின்சாரம் மற்றும் உரம் உற்பத்தியிலும் சிறந்து விளங்கு கிறது.

சிறப்பு மிகு இடங்கள்:

முயல் தீவு, துறைமுக கடற்கரை, ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா முதலியவை பொழுதுபோக்கு இடங்கள் ஆகும்

திருவிழாக்கள்:

முத்தாரம்மன் கோவில் திருவிழா, பனிமயமாதா திருவிழா, திருச்செந்தூர் சஷ்டி மற்றும் வைகாசி விவசாகம் இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

மக்கள் ஒற்றுமை:

இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

முடிவுரை:

பாரதியார், உமறுபுலவர்,வ.உ.சிதம்பரநார், வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற சான்றோர்கள் பிறந்த மண்ணை காப்பது நமது கடமையாகும்.

எங்கள் ஊர்
திருவள்ளூர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:

எங்கள் ஊர் திருவள்ளூர், பல்லவர்களின் ஆளுமையில் இருந்த இந்நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அமைவிடம்:

தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கூவம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் உள்ளது.

பெயர்க்காரணம்:

வீரராகவ கோவிலில், 'விஷ்ணு' என்ற இறைவனின் தூக்க நிலையை குறிப்பிடுகின்ற வகையில் திருவல்லூரு என்பது திருவள்ளூர் என்று பெயர் வந்திருக்கலாம்.

தொழில்கள்:

இங்கு பெரிய தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. மின்னணுவியல் பொருட்கள் மற்றும் வாகனம் உற்பத்தி இங்கு பெரிய அளவில் செயல்படுகிறது.

சிறப்பு மிகு இடங்கள்:

வீரராகவப் பெருமாள் கோவில், வடிவுடை அம்மன் கோவில், சுருட்டபள்ளி நீர்வீழ்ச்சி, உப்பேரி பறவைகள் சரணாலயம் முதலியவை சிறப்பு மிகு இடங்களாகும்.

திருவிழாக்கள்:

வீரராகவப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் வடிவுடைய அம்மன் கோவிலில் கொண்டாடப்படும் திருவாதிரை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும்.

மக்கள் ஒற்றுமை:

இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

முடிவுரை:

நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.

எங்கள் ஊர்
திண்டுக்கல்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை

எங்கள் ஊர் திண்டுக்கல். திப்புசுல்தானின் ஆட்சியில் இருந்த திண்டுக்கல் ஒரு புகழ் பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. அத்தகைய மண்ணைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அமைவிடம்

தமிழ்நாட்டில் தென்பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலையாலும் கிழ்க்கில் காவிரி நதியாலும் சூழப்பட்டுள்ளது.

பெயர்க்காரணம்

ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருப்பதால் 'திண்டுக்கல்' என்று பெயர் வந்ததாக கருதலாம்.

தொழில்கள்

திண்டுக்கல் விவசாயம், சிறு தொழில்கள் மற்றும் பெரிய அளவிலான உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பூட்டு உலகம் புகழ் பெற்றது.

சிறப்பு மிகு இடங்கள்

மிக பழமையான பேகம்பூர் பெரிய பள்ளிவாசல், கோட்டை மாரியம்மன் கோவில், மலைக்கோட்டை திப்பு சுல்தான் மணிமண்டபம் முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.

திருவிழாக்கள்

மாசி மாதம் கோட்டை மாரியப்பன் திருவிழா, பழனி பங்குனி உத்திர திருவிழா மற்றும் தைப்பூச திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

மக்கள் ஒற்றுமை

இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

முடிவுரை

பாரம்பரியம், இயற்கை வளங்கள் மற்றும் பொருளாதார திறன்கள் நிறைந்த எங்கள் ஊரைப் பாதுகாப்பது எங்கள் கடமை ஆகும்.

எங்கள் ஊர்
பெரம்பலூர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
முடிவுரை
முன்னுரை

எங்கள் ஊர் பெரம்பலூர் . பல வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்களைக் கொண்ட பெரம்பலூர் நகரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அமைவிடம்

பெரம்பலூர் சுற்றி சேலம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

பெயர்க்காரணம்

முன்னோர் காலத்தில் இப்பகுதி புலிகளும் சிறுத்தைகளும் வாழ்ந்த பெரும் வனப்பகுதி. ஆகையால் இப்பகுதியை பெரும்புலியூர் என்று அழைக்கப்ட்டது. பெரும்புலியூர் என்ற பெயர் மருவி பெரும்பலூர் என்றாகிவிட்டது.

தொழில்கள்

விவசாயம், சிமென்ட் தொழிற்சாலைகள், சக்கரை ஆலைகள், காகித ஆலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இங்கு சிறந்து விளங்குகிறது.

சிறப்பு மிகு இடங்கள்

குடுமியான் மலை கோயில், வீரமாகாளி அம்மன் கோயில், பச்சமலை மலைகள், கிளியூர் நீர்வீழ்ச்சி, அரசு அருங்காட்சியகம் முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.

திருவிழாக்கள்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா, பச்சையம்மன் கோவில் திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.

மக்கள் ஒற்றுமை

இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

முடிவுரை

நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.