அனுப்புநர்
கண்ணன்.வ,
95, தோப்புத் தெரு,
நெய்வேலி -607 403.

பெறுநர்
நிர்வாகி அவர்கள்,
தினமணி நாளிதழ்,
அண்ணா சாலை,
சென்னை -600002.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: எழுத்தர் பணிக்கு விண்ணப்பம் .

வணக்கம். தங்கள் நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரிய எழுத்தர் தேவை என்னும் விளம்பரத்தைத் தங்கள் நாளிதழிலேயே கண்டேன். அப்பணியில் சேர விருப்பு கொண்டு விண்ணப்பிக்கிறேன். நான் முதுகலைத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளேன். கணிப்பொறியும் கற்றுள்ளேன். தமிழ்த் தட்டெழுத்திலும், ஆங்கிலத்தட்டெழுத்திலும் பயிற்சி பெற்று உயர்நிலைச் சான்றிதழ் பெற்றுள்ளேன். இவ்விண்ணப்பத்துடன் கல்லூரி சான்றிதழ் மற்றும் தட்டெழுத்துச் சான்றிதழ்களும் இணைத்துள்ளேன். எனவே, அன்பு கூர்ந்து அப்பணியில் என்னையமர்த்தி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

நெய்வேலி,
30.11.2028.
தங்கள் உண்மையுள்ள,
கண்ணன்.வ

உறைமேல் முகவரி :-
பெறுநர்
நிர்வாகி அவர்கள்,
தினமணி நாளிதழ்,
அண்ணா சாலை,
சென்னை - 600002.
அனுப்புநர்
ஊர்ப்பொதுமக்கள்,
தருவை கிராமம்,
திருநெல்வேலி மாவட்டம்.

பெறுநர்
சுகாதாரத்துறை அலுவலர், சுகாதாரத்துறை அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம்.

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,

பொருள்: கழிவுநீர்க் கால்வாய் முடவேண்டி விண்ணப்பித்தல்.

வணக்கம். திருநெல்வேலி மாவட்டம், தருவை கிராமத்தில் உள்ள அகிலன் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் நடக்கும் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்பட்டு வருகின்றனர். அந்தக் கழிவுநீர் கால்வாய்களை பாதாளச்சாக்கடை வழியில் செல்லுமாறு வழிவகை செய்து தர பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

தருவை,
10.03.2024.
தங்கள்
உண்மையுள்ள,
ஊர்ப்பொதுமக்கள்,
தருவை கிராமம்.
அனுப்புநர்
ஊர் பொதுமக்கள்,
மீனம்பட்டி,
சிவகாசி.

பெறுநர்
காவல்துறை ஆய்வாளர் அவர்கள், கிழக்கு காவல் நிலையம்,
சிவகாசி.

பொருள் : திருவிழாவிற்கு அனுமதி தர வேண்டி விண்ணப்பித்தல்

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.எங்கள் ஊர் மீனம்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவில் திருவிழா 03.08.2024 அன்று நடைபெற உள்ளது . திருவிழாவிற்கு ஒலிபெருக்கி மற்றும் இராமாயணம் நாடகத்திற்கும் அனுமதியும் பாதுகாப்பும் வழங்குமாறு கிராம பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

இப்படிக்கு,
ஊர் பொதுமக்கள்.
மீனம்பட்டி,
28.07.2024.
அனுப்புநர்
வி.குமரன்,
15, நேரு காலனி,
கே.கே நகர்,
மதுரை.

பெறுநர்
காவல்துறை ஆய்வாளர் அவர்கள், இருப்புப்பாதை காவல் நிலையம், மதுரை.

பொருள் :

இரயிலில் காணாமல் போன என் பெட்டியைக் குறித்து புகார்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் என் பெயர் குமரன் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் நேற்று மதுரையில் இருந்து சென்னைக்கு இரயிலில் பயணம் செய்யும் போது என்னுடன் எடுத்துச் சென்ற பெட்டி தொலைந்து போனது. விடியற்காலையில் சென்னையில் இறங்கிய போதுதான் என்னுடைய பெட்டி காணாமல் போனதை உணர்ந்தேன். எனது பெட்டி நம்பர் லாக் (Number lock) மூலம் பூட்டப்பட்டுள்ளது. எனது பெட்டியில் துணிகளும் சில முக்கிய ஆவணங்களும் இருக்கின்றது. அந்த ஆவணங்கள் மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து

எனது தொலைந்த பெட்டியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

சம்பவம் குறித்த விவரம்:-

சம்பவ தேதி : 19.08.2024

இரயில் எண் 260547 [நெல்லை எக்ஸ்பிரஸ்]

இருக்கை எண் : S4 கோச், 54.

பெட்டியின் அடையாளம் : வி.ஐ.பி பெட்டி, கருப்பு நிறத்தில் இருக்கும், பெட்டியின் அடியில் S.K. என்று எழுதியிருக்கும்.

மதுரை,
20.08.2024.

இப்படிக்கு
உண்மையுள்ள,
குமரன்.
9600011114
அனுப்புநர்
திருமுருகன்.வ,
36,கங்கை தெரு,
அண்ணா நகர்,
மதுரை.

பெறுநர்
மாநகராட்சி மன்றத் தலைவர் அவர்கள்,
மாநகராட்சி அலுவலகம்,
மதுரை.

மதிப்பிற்குரிய அம்மா/ ஐயா,

பொருள்: உயர்மின் ஒளி விளக்குகள் வேண்டி விண்ணப்பித்தல்

வணக்கம் . எங்கள் தெருவான கங்கை தெருவில் உள்ள மின்விளக்குகளின் வெளிச்சம் போதிய அளவில் இல்லை. இரவில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள், திருட்டு மற்றும் பிற சமூக விரோத செயல்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் இரவில் பயணிப்பதற்குப் பயப்படுகின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, எங்கள் தெருவில் மேம்பட்ட ஒளி விளக்குகள் (High voltage lights) அமைத்து தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் உடனடி நடவடிக்கைக்கு எங்கள் தெரு மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்.

நன்றி.

மதுரை,
20.10.2024.
இப்படிக்கு
உண்மையுள்ள,
ஆறுமுகம்.

உறை மேல் முகவரி
பெறுநர்
மாநகராட்சி மன்றத் தலைவர் அவர்கள்,
மாநகராட்சி அலுவலகம்,
மதுரை.