மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் | letter to EB office in Tamil

(Click the heading to learn to read)

அனுப்புநர்
க.அசோக்,
41, அண்ணா தெரு,
கன்னியாகுமரி.

பெறுநர்
மின்வாரிய அலுவலர்,
மின்வாரிய அலுவலகம், கன்னியாகுமரி.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்:- பழுதடைந்துள்ள மின்விளக்குகளைச் சரி செய்ய வேண்டி விண்ணப்பம்.

வணக்கம். எங்கள் தெருவான அண்ணா தெருவில் சுமார் ஐம்பது வீடுகள் உள்ளன. எங்கள் தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக மின் விளக்குகள் சரிவர இயங்கவில்லை. மாலை மற்றும் இரவு நேரங்களில் தெருவில் செல்வது மிகவும் கடினமாக உள்ளது. இரவில் பணிக்குச் சென்று விட்டு வீடு திரும்புவோர் வாகனங்களில் வரும் போது பள்ளம் மேடு தெரியாமல் பெரும் அவதிப்படுகின்றன. பல திருட்டுகளும் நடைபெறுகிறது. எனவே விரைவில் தெரு விளக்குகளைச் சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
க.அசோக்.

கன்னியாகுமரி,
20.11.2022.
உறைமேல் முகவரி
பெறுநர்
மின்வாரிய அலுவலர்,
மின்வாரிய அலுவலகம்,
கன்னியாகுமரி.
அனுப்புநர்
ப.கல்யாணி,
18, காளி அம்மன் கோவில் தெரு,
தூத்துக்குடி.

பெறுநர்
நகராட்சி ஆணையர்,
நகராட்சி அலுவலகம்,
தூத்துக்குடி.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: தெரு விளக்கு அமைத்து தர வேண்டி விண்ணப்பம்.

வணக்கம். எங்கள் தெருவில் வசிக்கும் மக்கள் தெரு விளக்கு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பஸ் நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டுமானால் கூட இந்த இருளிற்கு நடுவில்தான் செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இங்கு அடிக்கடி திருட்டுகள் நடைபெறுகின்றன. அதுவும் சாலையில் வழிப்பறிகள் மிகுதியாக உள்ளன. விளக்குகள் இல்லாத குறைபாடு தான் இதற்கு காரணம்.

இரவில் பணிக்குச் சென்று விட்டு வீடு திரும்புவோர் வாகனங்களில் வரும் போது பள்ளம் மேடு தெரியாமல் பெரும் அவதிப்படுகின்றன. அதனால் தாங்கள் தயவு கூர்ந்து ஒரு முறை நேரில் வந்து பார்த்து எங்கள் தெருவில் விளக்கு வசதி அமைத்துத் தர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

தூத்துக்குடி,
23.11.2022.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
ப.கல்யாணி.

உறைமேல் முகவரி:-
பெறுநர்
நகராட்சி ஆணையர்,
நகராட்சி அலுவலகம்,
தூத்துக்குடி.
aluvalaga kaditham in tamil | eb complaint letter in tamil | அலுவலக கடிதம் எழுதும் முறை
aluvalaga kaditham in tamil | eb complaint letter in tamil | அலுவலக கடிதம் எழுதும் முறை
அனுப்புநர்
வி. தமிழரசன்,
செயலர்,
பொன்னகர் மக்கள் மன்றம்,
பொன்னகர்,

விருதுநகர் - 3.

பெறுநர்
செயற்பொறியாளர் அவர்கள்,
தமிழ்நாடு மின்வாரியம்,
விருதுநகர்-1

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: பொன்னகர் பகுதியில்மின்விளக்குப் பழுது நீக்க வேண்டுதல் - சார்பாக

வணக்கம். பொன்னகர் பகுதியில் கடந்த இரு மாதங்களாகத் தெருவிளக்கு சரிவர எரியவில்லை. இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்திச் சமூகத்திற்கெதிரான குற்றங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றன. எனவே அருள் கூர்ந்து தெரு மின் விளக்கை பழுது நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

விருதுநகர்,
10.12.2023.

இப்படிக்கு உண்மையுள்ள, வி.தமிழரசன்.
ஊர் மக்கள் கையொப்பம்
1. கண்ணன்
2. வனிதா
3. திருமுருகன் .

உறைமேல் முகவரி :-
பெறுநர்
செயற்பொறியாளர் அவர்கள்,
தமிழ்நாடு மின்வாரியம்,
விருதுநகர்-6
அனுப்புநர்
அ.விக்ரம்,
15,கங்கை தெரு,
விசலாட்சி நகர்,
திருச்சி.

பெறுநர்
மின்வாரிய அலுவலகர் அவர்கள், மின்வாரிய அலுவலகம்,
திருச்சி.

பொருள் : மின்கம்பம் இடமாற்றம் கோரி விண்ணப்பித்தல்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் என் பெயர் அ.விக்ரம். நான் திருச்சி, விவேகானந்தர் நகர் 4 வது தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறேன். எனது புதிய வீட்டு வாயிலுக்கு எதிரே மின்கம்பம் உள்ளது. மேலும் அந்த கம்பம் சற்று சாய்ந்து இருக்கிறது. எனது வீட்டு வாயிலுக்கு முன்னால் இருப்பதால் மற்றும் ஆபத்தானதாக இருப்பதால் மின்கம்பத்தை கூடிய விரைவில் ஆய்வு செய்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இக்கடிதத்துடன் என் புதிய வீட்டின் பத்திரத்தின் நகல், ஆதார் அட்டைநகல் மற்றும் மின்கம்பத்தின் புகைப்படங்களை இணைத்துள்ளேன்.

நன்றி

திருச்சி,
26.12.2024.

இப்படிக்கு உண்மையுள்ள,
விக்ரம்.
(9800000011)
அனுப்புநர்
ஆ.விக்ரம்,
15,கங்கை தெரு,
விவேகானந்தர் நகர்,
திருச்சி.

பெறுநர்
மின்வாரிய அலுவலகர் அவர்கள், மின்வாரிய அலுவலகம்,
திருச்சி.

பொருள் : மின் மீட்டர் மாற்ற கோரி விண்ணப்பித்தல்

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். என் பெயர் விக்ரம் நான் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் கடந்த 20 ஆண்டுகள் வசித்து வருகிறேன். கடந்த நான்கு மாதங்களாக எங்கள் வீட்டின் மின் கட்டணம் அதிகமாக உள்ளது. ஆனால் நாங்கள் புதிதாக எந்த ஒரு மின்சார பொருளையும் உபயோகிக்கவில்லை. அதிக ஆண்டுகள் ஆனதால் எங்கள் வீட்டின் மின் மீட்டர் பழுதடைந்து விட்டதாக எண்ணுகிறேன். ஆகையால் அதனை ஆராய்ந்து புதிய மின் மீட்டர் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் என் வீட்டின் கடைசி ஒரு வருடத்திற்கான மின்கட்டண ரசீதை இணைத்துள்ளேன்.

மின்சார நுகர்வோர் எண்: xxxxx

நன்றி

திருச்சி,
27.12.2024.
இப்படிக்கு உண்மையுள்ள,
விக்ரம்.
அனுப்புநர்
வி செல்வம்,
15, புதுகிராமத் தெரு,
காஞ்சிபுரம்.

பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள், மின்வாரிய அலுவலகம்,
காஞ்சிபுரம்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்:- பழுதடைந்துள்ள மின்மாற்றியை [transformer] மாற்ற கோரி விண்ணப்பித்தல்.

வணக்கம் எங்கள் தெருவில் 2000-ல் மின்மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அதில் இருந்து அடிக்கடி புகை மற்றும் தீப்பொறி வருகிறது.அதன் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் ஆபத்து சற்று அதிகமாக உள்ளது. ஆகையால் பழுதடைந்துள்ள மின்மாற்றியை அகற்றி புதிய மின்மாற்றியை அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

காஞ்சிபுரம்,
10.7.2024.
இப்படிக்கு
உண்மையுள்ள,
செல்வம்.
முன்னுரை

ஆதிகாலத்தில் நெருப்பு மனிதனுக்கு வெளிச்சமாய் இருந்தது. தற்காலத்தில் மின்சாரம் மனிதனுக்கு வெளிச்சமாய் இருக்கின்றது.

மின்சாரம் இல்லையென்றால் இவ்வுலகமே இயங்காது. உலகமே இருளில் மூழ்கிவிடும். அத்தகைய அத்தியாவசியத் தேவையான மின்சாரம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மின்சக்தி உருவாகும் முறைகள்

மின்சாரம் எனப்படுவது மின்னணுக்களின் ஓட்டத்தினால் உருவாகும் ஒரு நிகழ்வாகும். மின்னைப் பயன்படுத்தி ஒளி, ஒலி, வெப்பம் ஆகிய மூன்றையும் உருவாக்க முடியும்.

மின்சக்தியானது நீர் மின்நிலையங்கள், கடலலை, அனல் மின் நிலையம், சூரிய ஆற்றல், காற்றின் வேகம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது.

மின்சாரத்தின் அவசியம்

மின்சக்தியானது .மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு, கல்வி, மருத்துவம் அனைத்துமே மின்சாரத்தின் மூலம் செயல்படுகின்றன. அத்தகைய இன்றியமையாத தேவையாக விளங்கும் மின்வளத்தை சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துவது சிறந்ததாகும்.

மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள்

மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்று உலகம் உள்ளது. ஆகவே மின்சார சாதனங்களை நாம் பயன்படுத்திய பின் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். அதிகம் மின்சாரத்தை பயன்படுத்தும் கருவிகளை தவிர்த்து கொள்வதன் மூலமாகவும் மின்சாரத்தை சேமித்து கொள்ள முடியும். மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிக அளவான இயற்கை வளங்கள் வீணாக்குவதால் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

முடிவுரை

மின்சாரத்தின் தேவையானது மனித குலத்திற்கு இன்றியமையாததாக மாறிவிட்டது. அதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது.

எனவே இப்போதே விழித்துக் கொள்வோம், மின் சிக்கனம் தேவை என்பதை உணர்ந்து எதிர்கால உலகை இருளில் தள்ளாமல் ஒளிரச் செய்வோம்.

நன்றி!

tamil katturai | minsaram katturai | மின்சாரம் கட்டுரை
tamil katturai | minsaram katturai | மின்சாரம் கட்டுரை

Reference tags:

Tamil kaditham | Tamil kaditham Format | Tamil formal letter writing | kaditham in Tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | aluvalaga kaditham in Tamil | tholilmurai kaditham | Tamil letter writing | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | தொழில்முறை கடிதம் எழுதும் முறை | அலுவலக கடிதம் எழுதும் முறை | புகார் கடிதம் | மின்சார வசதி வேண்டி விண்ணப்பம் | Minsara Vasathi Vendi Vinnappam