Never Stop Learning
(click heading to learn how to read)


அனுப்புநர்
வி. கண்ணன்,
த/பெ விமல்,
க.எண் 18 கிழக்குத் தெரு,
வள்ளியூர்,
வள்ளியூர் ஒன்றியம்.
பெறுநர்
ஊராட்சி மன்றத் தலைவர்,
ஊராட்சி மன்ற அலுவலகம்,
வள்ளியூர்,
வள்ளியூர் ஒன்றியம்.
பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பத்தல்
ஐயா,
வணக்கம். எங்கள் தெருவில் உள்ள குடிநீர்க் குழாய் உடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாள்களாகக் குடிநீர் தெருவில் வீணாகிக் கொண்டு இருக்கிறது. இதனால், தண்ணீர் இன்றி எங்கள் தெருவில் வசிப்போர் துன்பப்படுகின்றனர். எனவே, உடைந்துபோன குடிநீர்க் குழாயைச் சரி செய்து தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
நாள் : 25.07.2022
இடம் : வள்ளியூர்.
இப்படிக்கு தங்கள்
உண்மையுள்ள, கண்ணன். வி.
உறை மேல் முகவரி:
பெறுநர்
ஊராட்சி மன்றத் தலைவர்,
ஊராட்சி மன்ற அலுவலகம்,
வள்ளியூர்,
வள்ளியூர் ஒன்றியம்.
அனுப்புநர்
வி. கண்ணன்,
15, மேற்கு ரத வீதி,
வெள்ளாங்குளி,
அம்பாசமுத்திரம் வட்டம்.
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள், நகராட்சி அலுவலகம், அம்பாசமுத்திரம்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: குடிநீர் வசதி வேண்டுதல் -சார்பாக.
வணக்கம் .எம் ஊர் அம்பாசமுத்திரம் நகராட்சி எல்லைக்குட்பட்டது. எங்கள் ஊரில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வாழ்கின்றோம். நாளும் புதிய புதிய குடியிருப்புகள் தோன்றிக் கொண்டே உள்ளன. ஆனால், எம் ஊரில் குடிநீர் வசதி போதிய அளவு இன்மையால், நாங்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றோம். ஐந்தாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நான்கைந்து குடிநீர்க் குழாய்களே இப்பொழுதும் உள்ளன. அவை இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்பப் போதுமானதாக இல்லை. மேலும் அக்குழாய்களும் சரியாக இயங்குவதில்லை. எனவே பலரும் வேறு இடங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டியுள்ளது. பலர், மழைக்காலங்களில் குளங்களிலும், குட்டைகளிலும் தேங்கி நிற்கும் நீரை எடுத்து குடிக்கின்றனர். அந்நீர் மாசுடையதாக இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகித் துன்பப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில் பெரிய குடிநீர்த் தொட்டி ஒன்று அமைத்துத் தூய்மை செய்யப்பட்ட குடிநீர் குழாய்களின் மூலம் நாங்கள் தட்டுப்பாடின்றிப் பெறுவதற்கு உரிய ஏற்பாட்டினை உடனடியாகச் செய்து உதவும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
நன்றி.
வெள்ளாங்குளி,
9.12.2023.
இப்படிக்கு உண்மையுள்ள,
கண்ணன்
ஊர் மக்கள் சார்பாக.
உறைமேல் முகவரி :-
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி அலுவலகம்
அம்பாசமுத்திரம்.-627401.
அனுப்புநர்
தி ஆறுமுகம்,
23. முதல் தெரு,
சுல்கண்டு நகர்,
கடிச்சம்பாடி.
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர்,
ஊராட்சி மன்ற அலுவலகம், கடிச்சம்பாடி.
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
பொருள் : குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பித்தல்.
வணக்கம். நான் ஆறுமுகம், மேலே குறிப்பிட்டுள்ள சுல்கண்டு நகரில் ஐந்து ஆண்டு காலமாக வசித்து வருகிறேன். இப்பகுதியில் குடிநீர் வசதி இல்லை. தினசரி தேவைக்காக குடிநீர் எடுத்து வர ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தேவைக்கு குடிநீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எங்களால் அது இயலவில்லை. எனவே எங்கள் பகுதியில் விரைவில் குடிநீர் வசதி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
கடிச்சம்பாடி,
20.10.2024.
இப்படிக்கு உண்மையுள்ள,
ஆறுமுகம் .
உறைமேல் முகவரி
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள், ஊராட்சி மன்ற அலுவலகம், கடிச்சம்பாடி.
Reference Video :-
Reference Tags:-
குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம் | letter writing in tamil | vinnappam kaditham in tamil | tholil murai kaditham in tamil | kaditham in tamil | kudineer vasathi venti kaditham in tamil |கடிதம் எழுதும் முறை | aluvalaga kaditham in tamil | kudineer vasathi vendi kaditham in tamil | kudineer vendi vinnappam in tamil | tholil murai kaditham | கடிதம் எழுதுவது எப்படி | kaditham eludhum murai | kaditham eluthuvathu eppadi
© 2025. All rights reserved.