Never Stop Learning
விடுப்பு விண்ணப்பம் | Leave letter in Tamil
(Click the heading to learn to read)
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புநர்
க.வனிதா,
நான்காம் வகுப்பு 'ஆ' பிரிவு,
புனித தாமஸ் ஆங்கில மேல்நிலை பள்ளி,
சேலம்.
பெறுநர்
வகுப்பு ஆசிரியர் அவர்கள்,
நான்காம் வகுப்பு 'ஆ' பிரிவு,
புனித தாமஸ் ஆங்கில மேல்நிலை பள்ளி,
சேலம்.
மதிப்பிற்குரிய அம்மா,
வணக்கம். எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு வர இயலவில்லை. ஆகவே 25.10.2022 முதல் 26.10 2022 வரை இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
சேலம்,
25.10.2022
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
க.வனிதா


அனுப்புநர்
க.விக்னேஷ்,
ஆறாம் வகுப்பு 'ஆ' பிரிவு,
இந்திரா மேல்நிலைப் பள்ளி,
திருநெல்வேலி.
பெறுநர்
வகுப்பாசிரியர் அவர்கள்,
ஆறாம் வகுப்பு 'ஆ' பிரிவு,
இந்திரா மேல்நிலைப் பள்ளி,
திருநெல்வேலி.
மதிப்பிற்குரிய அம்மா,
வணக்கம். என் சகோதரியின் திருமணம் அடுத்த வாரம் திருச்சியில் நடைபெற உள்ளது. அதற்கு நான் என் பெற்றோருடன் செல்வதால், தயை கூர்ந்து எனக்கு 18, 19, 20.2.2024 மூன்று நாட்கள் விடுப்பு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள,
க.விக்னேஷ்
கண்ணன்.
பெற்றோர் கையொப்பம்
திருநெல்வேலி,
12.2.2024.
Reference tags:
Tamil kaditham | | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | Tamil letter writing | Tamil composition | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | leave letter tamil | leave letter | leave letter in tamil | விடுப்பு விண்ணப்பம் தமிழ் | viduppu vinnappam | tamil leave letter | vidumurai vinnappam | விடுமுறை விண்ணப்பம் எழுதுவது எப்படி | viduppu vinnappam tamil | விடுப்பு விண்ணப்பம்
Reference videos:
© 2025. All rights reserved.