Never Stop Learning
Noolagam katturai | நூலகம் கட்டுரை
முன்னுரை:-
நூலகம் அறிவின் ஊற்று என்று கூறினால் அது மிகையாகாது. இதனால் தான் 'நூல் பல கல்' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். நம் அறிவை வளர உதவும் நூல்களை தொகுத்து வைக்கும் இடமே நூலகங்கள் ஆகும். அத்தகைய நூலகத்தையும் அதன் பயன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நோக்கம்:-
இறைவன் படைப்பில் நன்மை தீமைகளைப் பகுத்தாயும் அறிவு பெற்றவன் மனிதன். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் படிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, நூல் நிலையங்களுக்குச் சென்று படித்து தம் நுண்ணறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
தோற்றமும் வளர்ச்சியும்:-
கி.மு நான்காம் நூற்றாண்டிலேயே நூல் நிலையங்கள் தோன்றிவிட்டன. அப்போதைய நூலகங்களில் களிமண் ஏடுகளே நூல்களாக விளங்கின. அதன் பின்னர் வந்த நூலகங்கள் பனையோலை ஏடுகளாகக் காட்சி தந்தன. தாளும் அச்சுப்பொறியும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இன்றைய எழில் மிகு நூலகங்கள் தோன்றின.
புகழ்வாய்ந்தவை:-
உலகிலேயே மிகப் பெரிய நூலகங்கள் ரஷ்யாவில் உள்ள லெனின் ஸ்டேட் நூலகமும் அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரசும் ஆகும். தமிழகத்தில் தஞ்சை சரபோசி நூலகம் பழைமை வாய்ந்தது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய நூல் நிலையம் சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையமாகும்.
வகைகள்:-
நூல் நிலையங்கள் சிறுவர் நூல்நிலையம், நடமாடும் நூல் நிலையம், பொது நூல்நிலையம், பள்ளி நூல் நிலையம் எனப் பலவகைப்படும்.
அமைப்பு:-
மொழி நூல்கள், கணிதம், வரலாறு, சமூகவியல், கணிப்பொறியியல், பொறியியல், பொது அறிவு, கதை, கவிதை, நாவல், சமயம், பக்தி போன்ற பல்துறை நூல்கள் அங்கே தனித்தனியாக வைக்கப் பட்டிருக்கும். நூற்பட்டியல் தொகுக்கப்பட்டுத் தேவையான நூல்களை எளிதில் எடுத்துப் படிப்பதற்கு வசதி செய்யப்பட்டிருக்கும். நூல்களை நிலையத்திலே அமர்ந்து படிக்கவும், வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
பயன்கள்:-
ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களோடு, பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் நூலகங்கள் பயன்படுகின்றன. பொது மக்கள் படித்து பயன்பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விலை கொடுத்து வாங்க முடியாத மற்றும் எளிதில் கிடைக்காத நூல்களை பெற்றுப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு நூல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கலாம். ஓய்வு நேரங்களை பயன் உள்ளதாக்கிக் கொள்ளலாம்.
முடிவுரை:-
நல்ல நூல்களை நாளும் கற்று நல்லறிவு பெற்று, கலைச் செல்வங்களை வருங்கால சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும்.
நன்றி!!.
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நோக்கம்
தோற்றமும் வளர்ச்சியும்
புகழ்வாய்ந்தவை
வகைகள்
அமைப்பு
பயன்கள்
முடிவுரை


முன்னுரை
"ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகின்றது” என்னும் பொன்மொழி நூலகத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கின்றது. உயர்ந்த வாழ்க்கை நெறியையும், அறிவுச் செல்வத்தையும் அள்ளித் தரும் நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நூலகத்தின் தேவை
"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" என்பது பழமொழி. அதுபோல "நூலகமில்லா ஊருக்கு அறிவு பாழ் " என்பது புதுமொழி. மாணவர்களின் அறிவை மேம்படுத்த பள்ளியில் உள்ள புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களையும் படிக்க நூலகம் வேண்டும்.
வகைகள்
பள்ளி நூலகங்கள் தவிர பல்கலைக்கழக நூலகங்கள், தேசிய நூலகங்கள், ஆராய்ச்சி நூலகங்கள், சிறப்பு நூலகங்கள், வீட்டு நூலகங்கள் எனப் பல்வேறு நூலகங்கள் உள்ளன.
நூலகத்திலுள்ளவை
நூலகத்தில் பல்வேறு நூல்கள் முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இலக்கியம், அறிவியல், வரலாறு, கவிதை, சிறுகதை, ஆய்வு நூல் எனப் பல்வேறு நூல்கள் இங்கு இருக்கும்
படிக்கும் முறை
அமைதியின் உறைவிடமாய்த் திகழ்வது நூலகமாகும். நாம் உள்ளே சென்றதில் இருந்து வெளியே வரும்வரை அமைதி காத்தல் வேண்டும் . உறுப்பினர் கட்டணம் செலுத்தி நூல்களை இல்லத்திற்கு எடுத்துச் சென்று படித்து திருப்பிக் கொடுத்து விடலாம்.
முடிவுரை
எத்துறைச் சார்ந்த நூல்களையும் செலவின்றிப் படித்துப் பயன்பெற உதவும் அறிவுக்கருவூலமாய் நூலகம் விளங்குகிறது. வாழ்வில் வெற்றி பெற நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்.
நூலகம்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நூலகத்தின் தேவை
நூலகத்தின் வகைகள்
நூலகத்திலுள்ளவை
நூலகத்தில் படிக்கும் முறை
முடிவுரை
முன்னுரை
" கற்றது கையளவு கல்லாதது உலகளவு" என்பர். உலக அறிவை நாம் பெருவதற்குப் பாட நூல்கள் மட்டுமே போதாது. பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் தேடிப் படிக்க வேண்டும். அதற்கு துணை நிற்பது நூலகங்களாகும்.
நூலகத்தின் தேவை
இன்றைய காலகட்டத்தில் பவ்வேறு துறைகள் பெருகிவிட்டதால் பல்வேறு அத்துறைகள் சார்ந்த அறிவு மாணவர்களுக்குத் தேவை. பல்துறை அறிவு சார்ந்த நூல்கள் பல நூல் நிலையங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரே நேரத்தில் ஒரே கூரையின் கீழ் அமர்ந்து படிப்பதற்கு ஏற்ற இடம் நூலகமே ஆகும்.
நூலகத்தின் வகைகள்
நூலகங்கள் பல வகைப்படும் அவை மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம் ஊர்புற நூலகம் மற்றும் நடமாடும் நூலகம்.
நூலகத்திலுள்ளவை
நூலகத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் உள்ளன. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை தத்துவம், வரலாறு, புவியியல், கணினி, அறிவியல், வணிகவியல், வேளாண்மை, அரசியல், பொறியியல் நூல்களும், ஒலைச்சுவடிகள், குறுந்தகடுகள் மற்றும் பல நூல்கள் இருக்கும்.
நூலகத்தில் படிக்கும் முறை
நாம் நூலகளுக்குச் சென்று படிக்கும் போது அமைதியாகவும் பேசாமலும் இருக்க வேண்டும். அலைபேசி பயன்படுத்தக் கூடாது. புத்தகங்கள் கசங்காமலும் மடியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு புத்தகம் எடுத்தால் அதை எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் படிக்கும் வேறு ஒருவருக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது.
முடிவுரை
"நூல் பல கல்", என்பர் அறிஞர். மாணவர்களாகிய நாம் நாள்தோறும் நூலகங்களுக்குச் சென்று நமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் நூலகத்திற்கு சென்று படித்து, நாடும் வீடும் போற்றப் புகழ் பெறுவோமாக!
Reference tags:
Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்
Reference videos:
© 2025. All rights reserved.