Never Stop Learning
பெறுநர்
தலைமை ஆசிரியர் அவர்கள்,
வி.ஒ.சி மேல்நிலை பள்ளி,
சேலம்.
மதிப்பிற்குரிய அம்மா,
வணக்கம் நான் முருகன். உங்கள் பள்ளியில் என் மகன் தருண் பத்தாம் வகுப்பு படிக்கிறான். உங்கள் பள்ளியில் மாலையில் நடைபெறுகிற சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ள நான் அனுமதி தருகிறேன். இந்த வகுப்பு எனது குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். என் மனமார்ந்த ஒப்புதலை இக்கடிதம் மூலம் தெரிவிக்கிறேன்.
நன்றி.
சேலம்,
20.11.2023.
இப்படிக்கு,
முருகன்.
9811042141.


பெறுநர்
வகுப்பாசிரியர் அவர்கள்,
VII ஆ,
விவேகானந்தர் மேல்நிலைப் பள்ளி,
பேட்டை.
மதிப்பிற்குரிய அம்மா,
வணக்கம். நான் ஆறுமுகம். உங்கள் பள்ளியில் என் மகன் குமார், ஏழாம் வகுப்பு படிக்கிறான். என் மகன், 20.12.2024 அன்று திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான நடைபெற இருக்கும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்கப் போகிறான் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. இப்போட்டியில் அவன் கலந்து கொள்ள நான் அனுமதி தருகிறேன்.
என் மனமார்ந்த ஒப்புதலை இக்கடிதம் மூலம் தெரிவிக்கிறேன்.
நன்றி.
பேட்டை,
10.12.2024.
இப்படிக்கு
உண்மையுள்ள,
ஆறுமுகம்.
பெறுநர்
தலைமை ஆசிரியர்/ வகுப்பாசிரியர் அவர்கள்,
பள்ளியின் பெயர்,
ஊர்.
மதிப்பிற்குரிய அம்மா/ஐயா,
வணக்கம் நான் (பெற்றோரின் பெயர்). உங்கள் பள்ளியில் என் மகன்/மகள் ( மாணவர் பெயர் ), ( வகுப்பு எண் )வகுப்பு படிக்கிறான். அவன்/அவள் உங்கள் பள்ளியில் கோடை விடுமுறையில் நடைபெற உள்ள கோடை முகாமில் கலந்து கொள்ள நான் அனுமதி தருகிறேன். என் மனமார்ந்த ஒப்புதலை இக்கடிதம் மூலம் தெரிவிக்கிறேன்.
நன்றி.
இடம்,
தேதி.
இப்படிக்கு,
பெற்றோரின்
கையொப்பம்.
பெறுநர்
பள்ளி தலைமையாசிரியர் அவர்கள், பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை.
மதிப்பிற்குரிய அம்மா,
வணக்கம். என் பெயர் வி.ரேவதி.நாம் நம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். நான், 20.12.2024 அன்று நடைபெற உள்ள கலைத்திருவிழா நிகழ்ச்சியில் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டியில் பங்கேற்க உள்ளேன் ஆகையால் போட்டியில் கலந்து கொள்ள எனக்கு அனுமதி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
மதுரை,
12.12.2.024.
இப்படிக்கு
உண்மையுள்ள,
ரேவதி
அனுப்புநர்
த.வருண்,
57, வடக்கு சன்னதி தெரு,
உசிலம்பட்டி.
பெறுநர்
தலைமையாசிரியர் அவர்கள்,
விவேகானந்தர் மேல் நிலைப் பள்ளி,
உசிலம்பட்டி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: மாற்றுச் சான்றிதழ் வேண்டுதல்.
வணக்கம். நான் தங்கள் பள்ளியில் 2024 -ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துத் தேர்ச்சிப் பெற்றுள்ளேன். மேல் நிலைக் கல்வி பெற மதுரை செல்ல உள்ளதால் தயவு கூர்ந்து எனது மாற்றுச் சான்றிதழ் வழங்கப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
உசிலம்பட்டி,
10.05.2024.
தங்கள்
உண்மையுள்ள
மாணவன்,
வருண்.
அனுப்புநர்
வி.கோபால்,
64, பொன்னகர்,
திருநெல்வேலி.
பெறுநர்
தலைமையாசிரியர் அவர்கள்.
க.வி.அரசு மேல்நிலைப் பள்ளி,
திருநெல்வேலி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தல்.
வணக்கம். நான் தங்கள் பள்ளியில் 2023-24 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சிப் பெற்று உள்ளேன். மேல் படிப்பிற்காக பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சேர உள்ளேன். ஆகையால் தயவு கூர்ந்து எனது மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
திருநெல்வேலி,
15.05.2024.
தங்கள்
உண்மையுள்ள
மாணவன்,
கோபால்
அனுப்புநர்
அ முருகன்,
55, கங்கை தெரு,
விருதுநகர்.
பெறுநர்
பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் ,
பெரியார் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
மதிப்பிற்குரிய அம்மா,
பொருள்: மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்.
வணக்கம். எனது மகள் மு.தேவி தங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறாள். எனது பணியிடம் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளதால் எனது மகளின் பள்ளியை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தயவு கூர்ந்து எனது மகளின் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
விருதுநகர்,
10.05.2024.
தங்கள்
உண்மையுள்ள,
முருகன்.
Reference tags:
Tamil kaditham | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | Tamil letter writing | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | how to write permission letter to school in tamil | Anumathi kaditham by parents | Consent letter to school | Willing Letter in tamil | பெற்றோர் எழுதும் அனுமதி கடிதம் | ஒப்புதல் கடிதம்
© 2025. All rights reserved.