Never Stop Learning
(click heading to learn how to read)
1. என் அன்பான ஆசிரியரின் பெயர் திரு. கண்ணன்.
2. அவர் எனக்கு அறிவியல் கற்பிக்கிறார்.
3. அவர் அனைத்து மாணவர்களிடமும் அன்பு கொண்ட ஒரு இனிமையான நபர்.
4. அவர் மிகவும் கண்ணியமாகவும் நட்பாகவும் இருப்பார்.
5. அவர் அறிவியல் உண்மைகளை விளக்கத் தொடங்கும் போது, ஆர்வமுள்ள மாணவர்கள் கற்பனையில் தொலைந்து போவார்கள்.
6. தன் வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரும் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்டு புரிந்துக்கொள்வதை அவர் எப்போதும் உறுதி செய்வார்.
7. வகுப்பறையில் கல்வி பாடங்கள் தவிர பல விஷயங்களை அவர் எங்களுக்கு கற்றுக் கொடுப்பார்.
8. வகுப்பில் பலவீனமான மாணவர்களுக்கு அவர்களின் கருத்துகளை தெளிவுபடுத்துவதற்காக அவர் சிறப்பு கவனம் செலுத்துவார்.
9. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர் எப்பொழுதும் எங்களை ஊக்குவிப்பார்.
10. என் வாழ்வில் இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


விவேகானந்தர் உயர்நிலைப்பள்ளி, பத்தமடை தலைமை தமிழாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெறும் திரு. கண்ணன் அவர்களுக்கு பள்ளியின் மாணவ மாணவியர் மனம் நெகிழ்ந்து வழங்கும் பாராட்டு மடல்.
கடமையே கண்ணெனக் கருதும் சான்றீர்:-
நீவிர் இருபத்தைந்து ஆண்டுகள் வேறு சில பள்ளிகளிலும் இப்பள்ளியிலும் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளீர்கள். உங்கள் பால் முன்னாள் பயின்ற மாணவ, மாணவியர் பல துறைகளிலும் உயர்பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். நீங்கள் கடமை உணர்ச்சியோடு வகுப்புக்கு வந்து கன்னித்தமிழ் அமுதை எங்களுக்கு ஈந்த பாங்கினை எம்மால் மறக்க இயலுமா?
முத்தமிழ் அறிவை முனைந்து தரும் மூதறிஞரே!
எங்களுக்குப் பாட நூலொடு நில்லாமல், பண்டைத் தமிழர் வாழ்வியலையும் நினைவூட்டிப் பழமையும் புதுமையும் கலந்து வாழ்வில் வாழ வேண்டுமென்பதை அடிக்கடி சுட்டிக் காட்டியுள்ளீர், அவ்வாறே வாழ்ந்து காட்டுவோம் என்று இப்போது உமக்கு உறுதி கூறுகிறோம். தத்தம் தாய்மொழி வளர்ச்சியில் பாடுப்படுபவரே தம்மை வளர்த்துக் கொள்பவர் ஆவார் என்றும் நல்ல மொழி வளர்ச்சியே நல்ல மன வளர்ச்சிக்குக் காரணம் என்று நீவிர் கூறிய அறிவு சான்ற உரைகள் எங்கள் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துஎங்கள் வாழ்க்கையை வளமாக்கும் அல்லவா?
ஒழுக்கமே உயிரெனக் கொண்டு உயர்ந்தீர்
கோல் எடாது, கடுஞ்சொல் கூறாது, ஒவ்வொருவர் குறையும் கண்டு, தனிப்பட்ட முறையில் தனிக்கவனம் செலுத்தி களைந்தீர். முறையோடு செய்யும் ஒழுங்கு, ஐம்புலனடக்கம், ஒழுக்கம் முதவியன பற்றி எங்களுக்கு பல முறை வற்புறுத்திக் கூறி வந்தீர்.
நாநலம் மிக்க நாவலரே!
கற்றறிந்து அடங்கலுக்கு இலக்கணமாய் அமைந்த உம்மை, ஆவினைப் பிரியும் கன்றுகளைப் போல பிரிந்து தவிக்கும் நாங்கள் செயலற்றுக் கண் கலங்கி நிற்கின்றோம். பிரிவுத் துன்பம் எத்தகையது என்பதை உம் பிரிவால் உணர்கிறோம். எங்களை நீங்கள் பிரிந்தாலும், உம் பொன்ணுரைகளைப் போற்றிப் பின்பற்றுவோம். எங்கள் உள்ளங்களில் உம்மை வைத்து வழிபடுவோம். நீவிர் நம் பள்ளியை விட்டு ஓய்வு பெற்றாலும், ஓய்வு நேரங்களில் நம் பள்ளிக்கு வருகை தந்து பட்டறிவால் பெற்ற அறிவை ஈந்து வழி காட்டுவீர் என நம்புகிறோம். நீவிர் செந்தமிழ் போலச் சீருற வாழத் திருவருள் சுரக்குமாறு இறைவனை வேண்டி உமக்குப் பிரியா விடை கூறுகிறோம்.
வணக்கம்.
மதுரை,
3.03.2024
உங்கள் பணிவார்ந்த
விவேகானந்தர் உயர்நிலைப்
பள்ளி மாணவ, மாணவியர்.
Reference tags:
Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | ஆசிரியர் பற்றிய பேச்சு | 10 lines about my favourite teacher in Tamil | எனக்கு பிடித்த ஆசிரியர் | 10 வரி கட்டுரை
Reference videos:
© 2025. All rights reserved.