Never Stop Learning
மாமா / அத்தைக்கு கடிதம் | உறவுமுறை கடிதம்
(click heading to learn how to read)
அன்புள்ள அத்தைக்கு,
அண்ணன் மகன் குமார் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் மாமாவின் நலத்தையும் அறிய விரும்புகிறேன். எங்கள் ஆசிரியர் கவிஞர் மு.மேத்தா எழுதிய "கண்ணீர்ப் பூக்கள்" என்ற நூல் பற்றி கூறினார். அந்நூலில் அவர் சொன்ன சில கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நூலை முழுமையும் நான் வாசித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். திருச்சியில் அந்நூல் கிடைக்கவில்லை. எனவே சென்னையில் உள்ள புத்தக அங்காடியில் அந்நூலை வாங்கி எனக்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
15,காந்தி நகர்,
திருச்சி,
நாள் : 16.08.2022
இப்படிக்கு அன்புள்ள,
குமார்.
உறைமேல் முகவரி
பெறுநர்:
திருமதி வி.செல்வி,
32, பாரதி நகர்,
சென்னை - 6.


அன்பு சித்தி அவர்களுக்கு,
வணக்கம், தங்களின் நலமறிய ஆவல் சித்தி! நேற்றைய தமிழ் வகுப்பில் எங்கள் தமிழாசிரியர் "பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள்” ஆகியவற்றுள் கூறப்பட்டுள்ள கருத்துகள் பற்றிக் கூறினார். அவையெல்லாம் எனக்கு மிகுந்த சுவாரசியமாக இருந்தது. அந்நூல்களில் கூறியுள்ள கருத்துகள் முழுவதும் வகுப்பில் போதிக்கப் போதிய நேரமின்மையால் ஆசிரியர் நீங்களே படித்து அறிந்து கொள்ளுங்கள், என்று கூறினார். ஆதலால் எனக்கு இந்த இரண்டு நூல்களையும் வாங்கி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சாத்தூர்,
20.4.2024.
உங்கள் அன்புள்ள,
க. பாபு
உறைமேல் முகவரி
பெறுநர்
வசந்தி.அ
16,கங்கை தெரு,
மதுரை-8.
அன்புள்ள மாமாவிற்கு,
நலம் நலமறிய ஆவல். என் பிறந்த நாளிற்கு நீங்கள் பரிசாக அளித்த மிதிவண்டி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்த மிதிவண்டியில் தான் நான் தினமும் பள்ளிக்குச் செல்கிறேன். மிதிவண்டியில் செல்வது சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. நீங்கள் அளித்த பரிசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
14, பாரதி நகர்,
விருதுநகர்.
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள,
அனிதா.
உறைமேல் முகவரி
பெறுநர்
திரு. முருகன்,
19, கீழக்கு ரத வீதி,
கோவில்பட்டி - 627 411..


அன்புள்ள அத்தைக்கு,
உங்கள் அன்பு மருமகள் செல்வி எழுதுவது. நலம். நலமறிய ஆவல். நம் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா பங்குனி மாதத்தில் நடைபெற உள்ளது. திருவிழாவில் பல போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரே கொண்டாடி மகிழும் இவ்விழாவில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.
சிவகாசி,
12.3.2024
உங்கள்
அன்பு மருமகள்,
அ.செல்வி
உறைமேல் முகவரி:-
பெறுநர்
திருமதி க.தனலெட்சுமி,
8, நகைக்கடை வீதி,
திருப்பூர் - 9
அன்புள்ள சித்தப்பா அவர்களுக்கு,
இங்கு நானும் என் பெற்றோரும் நலம். அதுபோல் அங்கு உங்கள் நலமும் மற்றவர்கள் நலமும் காண அதிக ஆவல். எங்கள் ஊரில் 01.04.2024 அன்று கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது. சென்ற வருடம் திருவிழாவிற்கு நீங்கள் வரவில்லை, அதனால் இந்த வருடம் நீங்கள் கண்டிப்பாக திருவிழாவிற்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
20.3.2024,
கரூர்.
உங்கள்
அன்புள்ள மகள்.
கவிதா.
உறை மேல் முகவரி:-
பெறுநர்
வி.முருகன்,
17,C பெரியார் தெரு,
மதுரை-4.
Reference tags:
Reference videos:
Tamil kaditham | informal letter in tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | uravmurai kaditham in Tamil | Tamil letter writing | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | தமிழ் கடிதம் | கடிதம் எழுதும் முறை | உறவுமுறை கடிதம் எழுதும் முறை
© 2025. All rights reserved.