தாத்தா / பாட்டிக்கு கடிதம் | Tamil Letter Writing

(Click the heading to learn to read)

உறவுமுறை கடிதம் எழுதும் முறை | Tamil informal letter | uravumurai kadithamஉறவுமுறை கடிதம் எழுதும் முறை | Tamil informal letter | uravumurai kaditham

அன்புள்ள தாத்தா, பாட்டி,

நலம் நலமறிய ஆவல் . இங்கு நாங்கள் அனைவரும் நலம். எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (16.07.23) முதல் நடைபெற உள்ளது. ஒரு வாரம் இத்திருவிழா நடைபெறும். பூச்சாட்டல், காப்புக்கட்டல், பூமிதித்தல், அலகுகுத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். திருவிழாவில் பல போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளான தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரே கொண்டாடி மகிழும் இவ்விழாவில் நீங்கள் இருவரும் வந்து எங்களுடன் சேர்ந்து சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன். உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

உசிலம்பட்டி,
10.7.2023.
இப்படிக்கு
அன்புள்ள,
தேவ்
உறைமேல் முகவரி:
பெறுநர்
வி.கண்ணன்,
15.பொன்னகர்,
மதுரை-3.

Reference tags:

Tamil kaditham | informal letter in tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | uravmurai kaditham in Tamil | Tamil letter writing | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | தமிழ் கடிதம் | கடிதம் எழுதும் முறை | உறவுமுறை கடிதம் எழுதும் முறை

Reference video: