அம்மா/ அப்பாவுக்கு கடிதம் | உறவுமுறை கடிதம்

(Click the heading to learn to read)

அன்புள்ள அப்பாவிற்கு,

இங்கு நானும் எனது நண்பர்களும் விடுதியில் நலமாக இருக்கிறோம். அங்கு நமது குடும்பத்தினர் நலமோடு இருக்க இறைவனைப் பிராத்திக்கிறேன். அப்பா நாங்கள் இம்மாதத்தில் விடுமுறை நாட்களாகிய (19.11.2022, 20.11.2022) சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுலா செல்ல விரும்புகிறோம். சுற்றுலாவிற்குரிய இடங்களாக ஊட்டி, கொடைக்கானல், மதுரை ஆகிய இடங்களைத் தேர்ந்து எடுத்துள்ளோம்.

இந்த வருடம் சுற்றுலா செல்வதற்குத் தாங்கள் எனக்கு அனுமதி தருவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். சுற்றுலாவின் போது ஒழுக்கமுடன் நடப்பேன்

8.11.2022
திருச்சி.
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள,
வருண்.ரா
உறைமேல் முகவரி
பெறுநர்
த.ராஜா,
35, விநாயகர் காலனி,
கோவில்பட்டி.
மதுரை,
19.02.2024.

அன்புள்ள அப்பாவுக்கு,

உங்கள் அன்பு மகள் சரஸ்வதி எழுதுவது. இங்கு நான் நலம் அதுபோல் நீங்களும் அம்மா, தம்பி நலம் அறிய ஆவல். சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் நான் நல்ல மதிப்பெண் பெறுவேன். ஆண்டுத்தேர்வு முடிந்த மறுநாள் பள்ளியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்ல உள்ளனர். அதில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன். மூன்று நாட்கள் செல்லும் இச்சுற்றூலாவில் சாப்பாட்டுச் செலவுடன் 3000/- ஐ பள்ளியில் கட்ட வேண்டும் . கைச் செலவுக்கு தங்கள் விருப்பம் போல் சிறுதொகையைச் சேர்த்து அனுப்பும் படியும், சுற்றுலா செல்ல இசைவு தரும்படியும் தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்,
சரஸ்வதி.

உறைமேல் முகவரி
பெறுநர்
சி. கண்ணன்,
15. முருகன் கோவில் தெரு
திருமங்கலம்.
uravu murai kaditham in tamil | tamil letter writing | உறவுமுறை கடிதம்uravu murai kaditham in tamil | tamil letter writing | உறவுமுறை கடிதம்

அன்புள்ள அம்மாவிற்கு,

நான் இங்கு நலம். அங்கு அனைவரின் நலம் அறிய ஆவல். இங்கு விடுதியில் எல்லா வசதிகளுடன் நான் நலமாக உள்ளேன். இங்குள்ள உணவு தரமாகவும் சுவையாகவும் உள்ளது. அதனால் நீங்கள் என்னைப் பற்றி நினைத்து வருத்தப்பட வேண்டாம். பள்ளியிலும் ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்துகிறார்கள். கடந்த தேர்வில் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எனக்கு சில கற்றல் உபரணங்கள் (பொருட்கள் பெயர்கள்) தேவைப்படுகிறது. அவற்றை நீங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை என்னை பார்க்க வரும்பொழுது வாங்கிக் கொண்டு வாருங்கள். அப்பாவிற்கும் தேவாவிற்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை,
19.11.2024.

இப்படிக்கு உங்கள் அன்பு மகள்
காவியா.

உறைமேல் முவரி
பெறுநர்
அ.ரேவதி,
15, வடக்கு ரத வீதி,
உசிலம்பட்டி.

அன்பு மகள் மாலதிக்கு

இங்கு வீட்டில் அனைவரும் நலம். உன் நலம் அறிய ஆவல். உன் பள்ளி ஆசிரியர் மூலம் நீ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதை நாங்கள் அறிந்தோம்.வீட்டில் அனைவரும் உன் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இன்று உன் அபாரமான சாதனையால் என் இதயம் பெருமிதந்தாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பி வழிகிறது. உன் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மற்றும் விடாமுயற்சி ஆகியவை பலனளித்துள்ளன, மாலதி. உன் திறனை நான் எப்போதும் நம்புகிறேன். உன்னால் உன் வருங்கால கனவுகளை நிஜமாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளாய். நம் வாழ்க்கையில் பல வாய்ப்புகள் நிறைந்துள்ளது. அதனை பயன்படுத்தி இதுபோல் தொடர்ந்து நீ வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

உசிலம்பட்டி,
10.01.2025.
இப்படிக்கு
உன் அன்பு அப்பா,
குமரன்.

உறைமேல் முதவரி
பெறுநர்
கு.மாலதி, பத்தாம் வகுப்பு,
வி.வி. பள்ளி விடுதி,
மதுரை-3.

Reference tags:

Tamil kaditham | Tamil kaditham Format | informal letter in tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | uravmurai kaditham in Tamil | Tamil letter writing | Tamil composition | Tamil letter writing for school students | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | தமிழ் கடிதம் | how to write a informal letter in Tamil | how to write kaditham in Tamil

Reference videos: