Never Stop Learning
முன்னுரை
உலகளவில் பெரிதும் மதிக்கப்படும். பரிசுகளில் ஒன்று நோபல் பரிசு ஆகும். அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அன்னையும் இந்தியாவும்
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. கற்றலுடன் தொண்டை துணையாகக் கொண்ட அன்னை தெரசா அயல்நாட்டுப் பெண்மணி ஆயினும், இந்திய நாட்டின் கண்மணி பொன்மணி ஆவர் யுகோஸ்லேவியா நாட்டில் 27.08.1910 இல் பிறந்து வளர்ந்து மதத் தொண்டு புரியப் புறப்பட்டு இந்தியாவுக்கு வந்தவர் தெரசா. நம் கல்கத்தாவில் வந்து இறங்கிய தெரேசா ஊரின் நிலை கண்டு வருந்தினார். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என எண்ணி நாட்டுப்பணியும் புரிந்தார்.
பசியும் நோயும்
பசியால் வாடிய மக்களின் முகம் தெரேசாவை நெகிழச் செய்தது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று எண்ணி பசித்த வயிற்றுக்குச் சோறிடும் பணியைத் தொடங்கினார். "நோயுள்ளவர்க்கே மருத்துவம் தேவை' என்பது பைபிள் பொன்மொழி. துன்பப்பட்டோர், துயருற்றோர், ஏழையர், எளியவர், கஞ்சிக்கும் வழியற்றோர் போன்றவர்களே அவருக்கு பிடித்தமானவர்கள். அவர்களுக்கு தொண்டு செய்வதே அவரது வாழ்க்கை ஆயிற்று.
கல்லும் கரைந்தது
நோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும். என்று விரும்பிய வள்ளலாரைப் பின்பற்றினார் அன்னை. செல்வந்தரிடம் சென்று உதவி கோரியபோது இவரைக் காறி உமிழ்ந்தவர் பலர். அதனையும் ஏற்று மீண்டும் இரந்த போது மனம் மாறிப் பலர் உதவி செய்தார்கள். அதனால் தொழு நோயாளிகளின் துயர் துடைக்கும் பணி இவரால் செம்மையுற மேற்கொள்ளப்பட்டது.
அன்னையும் நோபல் பரிசும்
20 ஆம் நூற்றாண்டின் மிக சிறந்த மனிதநேயம் உடையவரான அன்னை தெரேசாவுக்கு 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. எவரும் செய்யாத செயல், அவருக்கு கிடைத்த அப்பரிசின் பெருந்தொகையை முழுவதையும் மக்களின் மருத்துவ பணிக்கே செலவு செய்த அன்னையின் அருள் உள்ளம் மிகவும் அழகானது. அவர் செய்த செயலால் அவருக்கு மட்டும் நோபல் பரிசு கிடைக்கவில்லை இந்தியாவின் ஏழை மக்களுக்கும் அது போய் சேர்ந்தது. ஆகையால் அவர் தனித்துவமான தேவதை. நன்றி மறவாத நம் பாரதத் திருநாடு அவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதாகிய 'பாரத ரத்னா' அளித்து மேன்மைப்படுத்தியது.
முடிவுரை
'யாதும் ஊரே; யாவரும் கேளிர்'என்று பாடினால் மட்டும் போதாது பாடுபடவும் வேண்டும் என்று உணர்த்திய நம் அன்னை 1997-ல் கொல்கட்டாவில் மரணமடைந்தார். இன்றும் அவரின் இயக்கம் தனித்து நின்று தர்மக் கருவூலமாய் உலகுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு உதவுகிறது. அன்னையை பாராட்டினால் மட்டும் போதாது, அவரைப் பின்பற்றுதல் வேண்டும்.
நன்றி!
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து இந்திய மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டவர் அன்னை தெரசா அவர்கள். இந்திய மக்களின் ஏழ்மையைக் கண்டும் நோய்கொண்ட அவர்களின் உடல்நிலையைக் கண்டும் மனமிரங்கியவர். இந்திய நாட்டின் ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர் தெரசா அவர்கள். அயல்நாட்டிவிருந்து குடியேறினாலும் கடைசிவரை தன்னையொரு இந்தியப் பெண்மனி என்றே கூறிவந்த அவரின் சமூகத் தொண்டு மிகச் சிறப்பானது.
27.08.1910 யுகோஸ்லாவியா நாட்டில் பிறந்த தெரசா, கிறிஸ்து மதத்தைப் பரப்புவதற்காகவே இந்தியா வந்தார். இந்தியா வந்த தெரசா இந்திய மக்களின் ஏழ்மைநிலையைக் கண்டு மனம் இளகி அவர்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணம் கொண்டார். இந்தியாவின் கொல்கத்தா நகரில் ஆசிரியையாக தன் பணியைத் தொடங்கினாலும் கூடவே சமூகப் பணியையும் செய்ய ஆரம்பித்தார். தன் மதம் இனம் அனைத்தையும் மறந்து நோயுற்ற ஏழை எளிய மக்களுக்குத் தொண்டு செய்ய துவங்கினார்.
கிறித்துவ மதத்தினைச் சேர்ந்த தெரசாவை அப்போது பல இந்துக்கள் எதிர்த்தனர். ஒரு காளி கோவில் பூசாரி தெரசாவை கொலை செய்யவும் துணிந்தார். ஆனால் அவர் அன்னையின் சமூக தொண்டினை உணர்ந்து அன்னையின் சேவகனாக மாறினார்.
ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, உறையுள் இம்மூன்றுமே ஆகும். அதன்பிறகு
அவனுக்கு தேவை ஆரோக்கியம் இதனை உணர்ந்த தெரசா அம்மையார் சேவை செய்ய தொடங்கினார். எவருமே அருகில் செல்ல அருவெறுப்படையும் தொழு நோயுற்றவர்களையும், குஷ்டநோயாளிகளையும் தன் இருகரங்களில் தூக்கிச் சென்று மருத்துவம் செய்தார். சாலையோரங்களில் வசித்த ஏழை மக்களின் துயர் நீக்க மனம் கொண்டார். அதன் பொருட்டு சேவை நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
ஏழை மனிதர்கள் அனைவரையும் தன் சொந்த குழந்தையைப் போலவே கவனித்து வந்தார் தெரசா. "என் குழந்தைகளைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள்" என்று செல்வந்தர்களிடம் கையேந்தினார். பலர் ஆரம்பத்தில் தெரசா அம்மையாரை இகழ்தாலும், நாளடைவில் அவரின் தொண்டுள்ளத்தைப் புரிந்து பொருள் உதவி செய்தனர்.
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இறுதிவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தார் அன்னை தெரசா அவர்கள். தன்னோடு பல சகோதரிகளை சேர்த்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கும், நோயுற்றவர். -களுக்கும் அருந்தொண்டு செய்து வந்தார்.
தெரசாவின் சமூகத்தொண்டினைப் பாராட்டும் வகையில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசும் அன்னை அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான "பாரதரத்னா" விருது வழங்கி கௌரவித்தது. 1998 ம் ஆண்டு தெரசா அவர்கள் மறைந்தார். அவரது பூத உடல்தான் மறைந்தது. பிறர்க்கென வாழ்ந்த அவரின் புகழ் என்றும் மறையாது
முன்னுரை
ஒளவையார் தமிழின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் அறிஞர் ஆவார். பண்டைக் காலத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்று சிறந்த அறிவுடன் திகழ்ந்திருந்தனர் என்பதற்கு ஒளவையார் மிகச் சிறந்த சான்றாவார். தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிய ஒளவையாரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வாழ்க்கை குறிப்பு
ஒளவையார் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. இவர் தந்தைமார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும் அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக கோலோச்சி என்ற பெயரில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு காணப்படுகிறது. அவர் பெற்றோரிடம் வளராமல் பாணர்களிடம் வளர்ந்து ஊர் ஊராகச் சென்று பாடியவர் எனக் குறிப்பு இருக்கிறது.
நான்கு ஒளவையார்
"ஒளவை" என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற பொருளை உடையது. அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒளவைக்கு மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனியை தந்ததால் ஒளவை நீண்ட நெடிய ஆயுள் பெற்று சங்க காலம் முதல் சிற்றிலக்கிய காலம் வரை வாழ்ந்தாரோ அல்லது ஔவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்களா என்று ஔவையின் வரலாறு சரியாக வரையறுக்கப் படவிடவில்லை.
எழுதிய நூல்கள்
ஒளவை அவர்கள் எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் மொத்தம் 59 பாடல்கள் இயற்றியுள்ளார். மேலும், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நீதி நூல்களையும் அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அவல், ஒளவைக் குறள் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
ஒளவையாரின் சிறப்பு
பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர் ஒளவையார் அவர்கள் அவர் தம் படைப்புகள் மூலம் மக்களிடையே நீதியும் ஒழுக்கமும் பண்பாடும் பற்றிய நெறிகளைக் கற்றுத்தந்துள்ளார். அவர் எழுதிய நீதி நூல்களில் சிறு சிறு எளிய தமிழ் சொற்றொடர்களைக் கொண்டு வாழ்க்கையின் பெரிய நெறிகளை எளிமையாக கூறியுள்ளார்.
முடிவுரை
தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் ஒரு பொன்னான இடத்தைப் பெற்றுள்ள ஒளவையாரைப் போற்றுவோம், அவர் காட்டிய நல்வழியில் வாழ்வோம்.
1. ராணி லட்சுமிபாய் 1828 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி வாரணாசி நகரில் பிறந்தார்.
2. அவரின் இயற்பெயர் மணிகர்ணிகா மற்றும் அவரின் செல்லப்பெயர் மனு.
3. அவரின் பெற்றோர்கள் மொரோபந்த் தம்பே மற்றும் பகீரதி சப்ரே ஆவர்.
4. இவர் சிறுவயதிலியே குதிரையேற்றம், வாள் சண்டை, தற்காப்புக் கலைகள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.
5. 14 வயதில் ஜான்சி மகாராஜா கங்காதர் ராவுடன் 1842 இல் இவருக்கு திருமணம் நடந்தது.
6. திருமணத்திற்கு பிறகு அவர் ஜான்சியின் ராணி "லட்சுமி பாய்" என்று அழைக்கப்பட்டார்.
7. இவரது மகன் தாமோதர் ராவ் நான்கு மாத குழந்தையாக இருந்தபோது இறந்தார்.
8. ஆங்கிலேயர்களுக்கு எதிராகக்கிளர்ந்தெழுந்த பல இந்திய வீரர்களில் லட்சுமி பாய் ஒருவர் ஆவார்.
9. ராணி லட்சுமிபாய் குவாலியரில் 1858 ஆம் ஆண்டு ஜீன் 18 ஆம் தேதி தனது 23வது வயதில் போரிட்டு இறந்தார்.
10. குறுகிய காலம் மட்டும் உயிர் வாழ்ந்தாலும் அன்பு, வீரம் ரௌத்திரம் என சிறப்பு மிக்க குணங்களுடன் வாழ்ந்த, இந்தியா கண்ட வீர மங்கை ஜான்சி ராணி லட்சுமி பாய்
நன்றி!
Reference tags:
Tamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | Tamil katturaigal | தமிழ் கட்டுரைகள்
Reference videos:
© 2025. All rights reserved.