(Click the heading to learn to read)

உறவுமுறை கடிதம் | தோழிக்கு கடிதம்

அன்புள்ள தோழிக்கு /நண்பனுக்கு,

வணக்கம். இங்கு அனைவரும் நலம். அங்கு அதுபோல் அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் நலன் குறித்து எழுதுக.

நான் என் வகுப்பு மாணவர்களுடன் தஞ்சை நகர் சென்று வந்தேன். அது குறித்து இக்கடிதத்தில் எழுதுகிறேன்.

எங்கள் வகுப்பு மாணவர்கள் 40 பேருடன் வகுப்பாசிரியரும் தமிழாசிரியரும் 6.12.2022 அன்று புறப்பட்டு சென்றோம்.

மலைகள் இல்லா ஓர் இடத்தில் எவ்வளவு பெரிய கற்கோவில்! அதுவும் உலகப்புகழ் பெற்ற கோவில். ஒற்றைக்கல் நந்தி உள்ளங் கவர்ந்தது. இராசராச சோழன் பெருமைக்கும் கலையின் அருமைக்கும் அஃது ஒரு கலைக்களஞ்சியம். அடுத்து தஞ்சையில் உள்ள அரண்மனைக்குச் சென்றோம். அங்கு அக்காலக் கலைப் பொருட்கள், பல்வேறு சிலைகள் உள்ளன.

தஞ்சாவூர் பயணத்தின் நினைவாய் தலையாட்டிப் பொம்மை வாங்கிக் கொண்டு வந்தேன்.

திருச்சி,

23.12.2022

இப்படிக்கு

அன்புள்ள,

மலர்.வ

உறைமேல் முகவரி :-

பெறுநர்

அஅஅ,

30, கீழப்பள்ளி வாசல் தெரு,

மதுரை-5.

உறவுமுறை கடிதம் எழுதும் முறை | Tamil informal letter | uravumurai kadithamஉறவுமுறை கடிதம் எழுதும் முறை | Tamil informal letter | uravumurai kaditham

அன்புள்ள தோழிக்கு,

நான் மற்றும் எங்கள் வீட்டில் அனைவரும் நலம். அதுபோல் உங்கள் வீட்டில் அனைவரும் நலம் அறிய ஆவல். இந்த விடுமுறை நாட்களுக்கு நான் பாட்டி ஊருக்கு சென்றேன். அங்கு என் உறவினர்கள் அனைவரும் வந்தார்கள். எல்லோரும் ஒன்று கூடி விளையாடி மகிழ்ந்தோம். பாட்டி கூட கடைத்தெருக்கு சென்று விளையாட்டுப் பொருட்கள் வாங்கினேன். இந்த விடுமுறை நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோல் உன் விடுமுறை நாட்களும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். விரைவில் பள்ளி திறந்து உன்னை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

சேலம்,
16.05.2022

இப்படிக்கு

உன் அன்பு தோழி,

மலர்விழி.எ

உறைமேல் முகவரி:-

பெறுநர்

வனிதா. க

105, பிள்ளையார் கோவில் தெரு,

சேலம் -2

உறவுமுறை கடிதம் எழுதும் முறை | Tamil informal letter | uravumurai kadithamஉறவுமுறை கடிதம் எழுதும் முறை | Tamil informal letter | uravumurai kaditham

அன்புள்ள கண்ணனுக்கு,

வாழ்க. நலம். நலமே நாட்டம். இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் நீ மாநில அளவில் முதலிடம் பெற்ற செய்தியை நாளிதழ் வழி அறிந்தேன்; மகிழ்ந்தேன். எங்கள் வீட்டில் அனைவரிடமும் கூறி உன் படம் வெளிவந்த பத்திரிகையையும் காட்டினேன். நான் பெற்ற பெருமதிப்பாகவே எண்ணி எங்கள் வீட்டில் அனைவரும் உன்னை பாராட்டினர்.

இதுபோன்றே நீ மேல்நிலைப் பள்ளித் தேர்விலும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என விரும்புகிறேன். நானும் நன்குப் படித்து நல்ல மதிப்பெண் பெற, உனக்குக் கிடைத்த வெற்றி எனக்கும் நல்வழி காட்டியுள்ளது. உன்னை மனமார்ந்து பாராட்டி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டிக் கொள்கிறேன்.

15,விநாயகர் காலினி,

மதுரை

1.03.2023

இப்படிக்கு,

உன் ஆருயிர் தோழி,

வி.வனிதா

உறைமேல் முகவரி:-

பெறுநர்

வ. மீனா,

36, பாரதி நகர்,

திருநெல்வேலி.

தோழிக்கு கடிதம் எழுதும் முறை | பாராட்டு கடிதம் | tamil kaditham | nanbannuku kaditham
தோழிக்கு கடிதம் எழுதும் முறை | பாராட்டு கடிதம் | tamil kaditham | nanbannuku kaditham

அன்புள்ள தோழிக்கு,

வணக்கம். நலம். நலம் அறிய ஆவல். நீ எழுதிய மடல் கிடைத்தது. மாநில விளையாட்டுப் போட்டியில் மூன்றில் நீ முதன்மை பெற்றது அறிந்து மகிழ்கிறேன். என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீ ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய மூன்றிலும் பரிசுகளைப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நன்குப் பயின்று, நீ பிற நாடுகளுக்குச் சென்று விளையாடி வெல்ல வேண்டும்.

நம் பாரத நாடு விளையாட்டுப் பயிற்சியில் பின் தங்கிய நிலையில் இருப்பது வருத்தக்குரியது. உன் போன்ற வீரர்களால் அக்குறை நீக்கப்பட வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டி, அகில இந்திய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் கலந்து வெற்றி குவித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்புகழ் கிடைக்க உழைக்க வேண்டுகிறேன். என் ஊக்குவிப்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

47, அண்ணா தெரு,

நாகர்கோவில்

5.3.2023

இப்படிக்கு,

உன் தோழி,

மலர்விழி

உறைமேல் முகவரி:-

பெறுநர்

க. வனிதா,

37, ஐயப்பன் காலினி,

திருச்சி.

Reference videos:

Tamil kaditham | Tamil kaditham for friend | informal letter in tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | uravmurai kaditham in Tamil | tholiku kaditham | Tamil letter writing | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | தமிழ் கடிதம் | தோழிக்கு கடிதம் | கடிதம் எழுதும் முறை | உறவுமுறை கடிதம் எழுதும் முறை | பாராட்டு கடிதம் | letter to friend in tamil

Reference tags: