(Click the heading to learn to read)

நண்பனுக்கு கடிதம் | Nanbanukku kaditham in Tamil

அன்புள்ள தோழிக்கு /நண்பனுக்கு,

வணக்கம். இங்கு அனைவரும் நலம். அங்கு அதுபோல் அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் நலன் குறித்து எழுதுக.

நான் என் வகுப்பு மாணவர்களுடன் தஞ்சை நகர் சென்று வந்தேன். அது குறித்து இக்கடிதத்தில் எழுதுகிறேன்.

எங்கள் வகுப்பு மாணவர்கள் 40 பேருடன் வகுப்பாசிரியரும் தமிழாசிரியரும் 6.12.2022 அன்று புறப்பட்டு சென்றோம்.

மலைகள் இல்லா ஓர் இடத்தில் எவ்வளவு பெரிய கற்கோவில்! அதுவும் உலகப்புகழ் பெற்ற கோவில். ஒற்றைக்கல் நந்தி உள்ளங் கவர்ந்தது. இராசராச சோழன் பெருமைக்கும் கலையின் அருமைக்கும் அஃது ஒரு கலைக்களஞ்சியம். அடுத்து தஞ்சையில் உள்ள அரண்மனைக்குச் சென்றோம். அங்கு அக்காலக் கலைப் பொருட்கள், பல்வேறு சிலைகள் உள்ளன.

தஞ்சாவூர் பயணத்தின் நினைவாய் தலையாட்டிப் பொம்மை வாங்கிக் கொண்டு வந்தேன்.

திருச்சி,
23.12.2022.
இப்படிக்கு
அன்புள்ள,
மலர்.வ
உறைமேல் முகவரி :-
பெறுநர்
அஅஅ,
30, கீழப்பள்ளி வாசல் தெரு,
மதுரை-5.
பள்ளி கோடை விடுமுறை நாட்கள் குறித்து நண்பனுக்கு கடிதம் | nanbannuku kaditham
பள்ளி கோடை விடுமுறை நாட்கள் குறித்து நண்பனுக்கு கடிதம் | nanbannuku kaditham

அன்புள்ள நண்பனுக்கு,

நான் மற்றும் எங்கள் வீட்டில் அனைவரும் நலம். அதுபோல் உங்கள் வீட்டில் அனைவரும் நலம் அறிய ஆவல். இந்த விடுமுறை நாட்களுக்கு நான் பாட்டி ஊருக்கு சென்றேன். அங்கு என் உறவினர்கள் அனைவரும் வந்தார்கள். எல்லோரும் ஒன்று கூடி விளையாடி மகிழ்ந்தோம். பாட்டி கூட கடைத்தெருக்கு சென்று விளையாட்டுப் பொருட்கள் வாங்கினேன். இந்த விடுமுறை நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோல் உன் விடுமுறை நாட்களும் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். விரைவில் பள்ளி திறந்து உன்னை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

சேலம்,
16.05.2022

இப்படிக்கு

உன் அன்பு தோழன்,

கதிர்.எ

உறைமேல் முகவரி:-
பெறுநர்
அன்பழகன். க
105, பிள்ளையார் கோவில் தெரு,
சேலம் -2

அன்புள்ள கண்ணனுக்கு,

வாழ்க. நலம். நலமே நாட்டம். இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் நீ மாநில அளவில் முதலிடம் பெற்ற செய்தியை நாளிதழ் வழி அறிந்தேன்; மகிழ்ந்தேன். எங்கள் வீட்டில் அனைவரிடமும் கூறி உன் படம் வெளிவந்த பத்திரிகையையும் காட்டினேன். நான் பெற்ற பெருமதிப்பாகவே எண்ணி எங்கள் வீட்டில் அனைவரும் உன்னை பாராட்டினர்.

இதுபோன்றே நீ மேல்நிலைப் பள்ளித் தேர்விலும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என விரும்புகிறேன். நானும் நன்குப் படித்து நல்ல மதிப்பெண் பெற, உனக்குக் கிடைத்த வெற்றி எனக்கும் நல்வழி காட்டியுள்ளது. உன்னை மனமார்ந்து பாராட்டி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டிக் கொள்கிறேன்.

15,விநாயகர் காலினி,
மதுரை.
1.03.2023
இப்படிக்கு,
உன் ஆருயிர் நண்பன்,
வி.கவின்
உறைமேல் முகவரி:-
பெறுநர்
வ. கண்ணன்,
36, பாரதி நகர்,
திருநெல்வேலி.
நண்பனுக்கு கடிதம் | Nanbanukku kaditham in Tamil | urauvumurai kadithamநண்பனுக்கு கடிதம் | Nanbanukku kaditham in Tamil | urauvumurai kaditham

அன்புள்ள நண்பனுக்கு,

வணக்கம். நலம். நலம் அறிய ஆவல். நீ எழுதிய மடல் கிடைத்தது. மாநில விளையாட்டுப் போட்டியில் மூன்றில் நீ முதன்மை பெற்றது அறிந்து மகிழ்கிறேன். என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீ ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய மூன்றிலும் பரிசுகளைப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நன்குப் பயின்று, நீ பிற நாடுகளுக்குச் சென்று விளையாடி வெல்ல வேண்டும்.

நம் பாரத நாடு விளையாட்டுப் பயிற்சியில் பின் தங்கிய நிலையில் இருப்பது வருத்தக்குரியது. உன் போன்ற வீரர்களால் அக்குறை நீக்கப்பட வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டி, அகில இந்திய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் கலந்து வெற்றி குவித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்புகழ் கிடைக்க உழைக்க வேண்டுகிறேன். என் ஊக்குவிப்பையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

47, அண்ணா தெரு,
நாகர்கோவில்
5.3.2023
இப்படிக்கு,
உன் நண்பன்,
தருண்
உறைமேல் முகவரி:-
பெறுநர்
க. விகாஸ்,
37, ஐயப்பன் காலினி,
திருச்சி.

அன்புள்ள நண்பனுக்கு,

நலம், நலமறிய ஆவல். உன் கடிதம். கண்டேன்; களிப்படைந்தேன் அண்மையில் உன் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் நீ பங்கேற்று வெற்றி பெற்றதை அறிந்து மகிழ்கிறேன். பள்ளியில் பாடங்களைப் படிப்பதுடன் நின்று விடாமல், உடல், உள்ள வளர்ச்சிக்காக விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளாய். சென்ற ஆண்டு இரண்டு பரிசுகள் பெற்றதாக எழுதியிருந்தாய். இவ்வாண்டு ஐந்து பரிசுகள் பெற்றதாக எழுதியிருந்தாய் இவ்வாண்டு ஐந்து பரிசுகள் பெற்றிருப்பதிலிருந்து உன்னிடம் விளையாட்டில் ஆர்வம் கூடியிருப்பது தெளிவாகிறது.

"முயற்சி திருவினையாக்கும்" என்னும் மொழிக்கேற்ப நீ அதிக பரிசுகள் பெற்றமைக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல போட்டிகளில் நீ கலந்து கொண்டு வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி,
30.08.2024.
இப்படிக்கு
உன் அன்பு நண்பன்,
வி.ராஜன்.

உறைமேல் முகவரி
க.விகாஸ்,
15, புதுகிராமம் தெரு,
மதுரை-4.

அன்புள்ள நண்பன் குமரனுக்கு உன் ஆருயிர் நண்பன் தருண் எழுதும் அன்பு மடல்.

நான் இங்கு நலம். என் பெற்றோரும் உடன்பிறப்புகளும் நலமே! அங்கு நீ நலமா ? உன் பெற்றோர், உடன்பிறந்தோர் நலந்தானே?

என் பிறந்தநாள் அன்று வாழ்த்துத் தெரிவித்தாய். இன்பம் கொண்டேன். எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "கால் முளைத்த கதைகள் " நூலையும் பரிசாக அணுப்பியிருந்தாய். பேரின்பம் கொண்டேன்! இன்றைய நாளில் எனக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்பை அனுப்பியிருந்ததில் ஆனந்தம் அடைந்தேன். வாழ்வின் எதார்த்தமான நிகழ்வுகளை எளிய தமிழில் நடமாடவிடுவது எஸ். இராமகிருஷ்ணனின் பாணி. நுட்பமான கருத்துகளை நெஞ்சில் ஆணி அடித்தது போல பதிய வைப்பதில் கால் முளைத்த கதை நூலின் சிறப்பு. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல் அது. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது. புதையல் கிடைத்தவனைப் போல பூரித்துப் போகிறேன் நான். உன் வாழ்த்துக்கும் பரிசுக்கும் என் நீண்ட நன்றிகள்.

கோவில்பட்டி,
10.12.2023.
மாறா அன்புடன்,
தருண்.
உறைமேல் முகவரி
பெறுநர்
வி.குமரன்,
1/27 விஓ.சி நகர்,
தூத்துக்குடி-3

அன்புள்ள நண்பன் சத்யாவுக்கு,

நலம் நலமே நாட்டம். நீ எழுதிய மடல் கிடைத்தது. மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், மூன்றில் நீ முதன்மை பெற்றது அறிந்து மகிழ்கிறேன். இன்னும் நீ பிற மாநிலங்களுக்கு சென்று விளையாடி வெல்ல வேண்டும் என்பதே எண்ணம். பல போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் நற்புகழ் கிடைக்க உழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

10.4.2024,
திருத்தங்கல்.
இப்படிக்கு உன்
அன்பு நண்பன்,
வி. திருப்பதி.

உறைமேல் முகவரி:-
பெறுநர்
க.சத்யா,
34, வடக்குத் தெரு,
விருதுநகர்.

அன்புள்ள நண்பனுக்கு,

நான் நலம். உன் நலம் அறிய ஆவல். உன் தந்தை, தாய் தம்பி ஆகியோரின் நலம் அறிய ஆவல். உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க இக்கடிதத்தை எழுதுகிறேன். உன் கனவுகள் மற்றும் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி, நீ என்றென்றும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பாயாக. இக்கடிதத்துடன் உனக்கு பிறந்தநாள் பரிசாக பஞ்சதந்திர கதைகள் புத்தகம் ஒன்று அனுப்பியுள்ளேன். விரைவில் உன்னை சந்திக்க வருகிறேன்.

தருவை,
07.07. 2024.
இப்படிக்கு
உன் அன்பு நண்பன்,
குமார்
உறைமேல் முகவரி
பெறுநர்
அ.கண்ணன்,
15,கங்கை தெரு,
மதுரை-4.

ஆருயிர் நண்பனுக்கு

உன் அன்பு நண்பன் குமார் எழுதியது. நான் இங்கு நலம் அதுபோல உன் நலம் அறிய ஆவல். வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை நீ காப்பாற்றியதை அறிந்து பெருமை அடைகிறேன். உன் வீர செயலை அரசு பாராட்டி செய்தித்தாளில் வெளியிட்டதைப் பார்த்து என் பெற்றோரும் உனக்கு பாராட்டு தெரிவித்தனர். 'துணிந்தவர் தோற்றதில்லை' என்னும் புதுமொழிக்கு ஏற்ப நீ வாழ்க்கையில் துணிவோடு இருந்து இன்னும் பல சாதனைகள் பெற என் வாழ்த்துக்கள்.

மதுரை,
25.05.2024.
இப்படிக்கு
உன் அன்பு நண்பன்,
க.குமார்.

உறைமேல் முகவரி:-
பெறுநர்
வினோத்,
54,பெருமாள் தெரு,
பேட்டை - 624 001

அன்புள்ள நண்பன் வினோத்திற்கு,

நலம் நலமறிய ஆவல். இம்மாதம் 12ஆம் தேதி எங்கள் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு மைதானம் உட்பட பள்ளி முழுவதும் கொடிகள் வண்ண வண்ண பந்தல்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியின் முதல்வர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நான் பங்கேற்றேன். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்றேன். நீளம் தாண்டுதல் போட்டியில் என் நண்பன் குமார் முதல் பரிசு பெற்றான். பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றன. அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தோம். விளையாட்டு கழக தலைவர் பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன. உன் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவைப் பற்றி கடிதம் எழுதும்படி கேட்டு, இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்

மதுரை,
24.4.2024.
இப்படிக்கு
என்றும் அன்புடன்,
வ.திருமுருகன்

Reference videos:

Tamil kaditham | Tamil kaditham for friend | informal letter in tamil | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | uravmurai kaditham in Tamil | nanbanukku kaditham | Tamil letter writing | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | தமிழ் கடிதம் | நண்பனுக்கு கடிதம் | கடிதம் எழுதும் முறை | உறவுமுறை கடிதம் எழுதும் முறை | பாராட்டு கடிதம் | letter to friend in tamil

Reference tags: