Never Stop Learning


அனுப்புநர்
ஊர் பொதுமக்கள்,
சின்னம் பாளையம்,
பொள்ளாச்சி வட்டம்,
கோவை மாவட்டம்.
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சியல் அலுவலகம்.
கோவை மாவட்டம்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: எங்கள் கிராமத்தில் நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்-சார்பு.
பொள்ளாச்சி வட்டாட்சியர் எல்லைக்குட்பட்டது எங்கள் கிராமம். மொத்த மக்கள் தொகை 8,000. கல்வி கற்றவர் 50 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளனர். படித்த, படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 750 க்கு மேல். ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு வாய்ப்பில்லை. பொது அறிவைத் தெரிந்து கொள்ளவும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து நகர்புற மாணவர்களுக்கு இணையாக நாங்களும் போட்டித் தேர்வுகள் எழுதவும் வேண்டியுள்ளது. எனவே, கற்றவர்களின் பொது அறிவுத் திறன் வளரவும், நேரத்தைப் பயனுள்ளதாக்கவும் நூலகம் ஒன்று தேவைப்படுகிறது. ஆகையால் நூலக வசதி ஏற்படுத்தித் தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
சின்னம்பாளையம்
30.9.23.
இப்படிக்கு
உண்மையுள்ள,
ஊர் பொதுமக்கள்.
உறைமேல் முகவரி:-
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கோவை 641001.
கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை கடிதம்:-
அனுப்புநர்
வி.தருண்,
15, சன்னதி தெரு,
கடையம்.
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்,
ஊராட்சி மன்ற அலுவலகம்,
கடையம்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்:- கண்காணிப்பு கேமரா [CCTV Camera] பொருத்த கோரிக்கை.
வணக்கம். எங்கள் தெருவான சன்னதி தெரு கடையம் ஊராட்சிக்கு உட்பட்டது. இங்கு சுமார் 40 வீடுகள் உள்ளன. சமீப காலமாக எங்கள் தெருவில் அதிக திருட்டுகள் நடைபெறுகின்றன. வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் சக்கரம் மற்றும் உதிரி பாகங்கள் அதிக அளவில் திருடு போகின்றன. ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் திருடர்கள் எளிதில் தங்கள் வேலைகளை காட்டுகிறார்கள். ஆகையால் எங்கள் தெருவில் ஆங்காங்கே இரண்டு அல்லது மூன்று கண்காணிப்பு கேமரா பொருத்தி தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
கடையம்,
3.2.2024.
இப்படிக்கு,
தருண்.வி.
அனுப்புநர்
ம. கண்ணன்,
15, விநாயகர் தெரு,
காரியாப்பட்டி,
விருதுநகர் மாவட்டம்.
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
விருதுநகர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்:-மழைநீரை வெளியேற்ற வேண்டி விண்ணப்பித்தல்.
வணக்கம். எனது ஊரான காரியாப்பட்டி விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்டது. இங்கு சுமார் 50,000 மக்கள் வாழ்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதோடு, கொசுக்கள் உற்பத்தியால் நோய் பரவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகைாயால் குடியிருப்பைச் சுற்றியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
காரியாப்பட்டி,
10.12.2023.
இப்படிக்கு
உண்மையுள்ள,
ம. கண்ணன்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
விருதுநகர்.
அனுப்புநர்
விக்ரம்.ஆ
15, கங்கை தெரு,
பொன்னகர்,
ஊத்துக்குளி.
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊத்துக்குளி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : தேவையில்லாத கருவேல மரங்களை அகற்ற கோரி விண்ணப்பித்தல்.
வணக்கம். என் பெயர் விக்ரம். நான் ஊத்துக்குளி ஊராட்சி கீழ் இருக்கும் பொன்னகர் என்னும் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசிக்கிறேன். எனது பகுதிக்கு பக்கத்தில் உள்ள வெற்று நிலத்தில் நிறைய கருவேல மரங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் அதிக குடியிருப்புகள் இருப்பதால் நிலத்தடி நீர் அதிக அளவில் உபயோகிக்கபடுகின்றன. நிலத்தடி நீர் தேக்க கருவேல மரங்களை வெட்டுவது நல்லது. ஆகையால் அந்த வெற்று நிலத்தில் இருக்கும் தேவையற்ற மரங்களை அகற்றி, நன்மை அளிக்கும் மரங்களை வைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
ஊத்துக்குளி,
26.12.2024.
இப்படிக்கு
உண்மையுள்ள,
விக்ரம்.
அனுப்பநர்
ஆ.குமரன்,
15, கங்கை தெரு,
காந்தி நகர்,
மதுரை-4
பெறுநர்
மாநகராட்சி அலுவலகர் அவர்கள்,
மாநகராட்சி அலுவலகம்,
மதுரை.
பொருள்: தொழில்வரி ரத்து செய்ய கோரி -விண்ணப்பித்தல்.
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,
வணக்கம். என் பெயர் குமரன். நான் மேலே. குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வருகிறேன். எனது தந்தையின் பெயர் திரு வி. ஆறுமுகம், அவர் ஆறு மாதங்களுக்கு முன் காலமானார். அவர் மதுரை, வடக்கு ரத வீதியில் கடை எண் 24,ல் துணி கடை நடத்தி வந்தார். கடையின் பெயர் யமுனா ரெடிமேட் மற்றும் கடையின் தொழில் வரி மதிப்பீட்டு எண் xx/xxx/xxx, அவர் காலமானதும் அந்த கடை வேறொரு நபருக்கு வாடகைக்கு விடப்பட்டது. ஆகையால் என் அப்பா பெயரில் இருக்கும் தொழில் வரியை ரத்து செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்துள்ளேன். நன்றி
மதுரை
2.1. 2025.
இப்படிக்கு உண்மையுள்ள,
குமரன்.
(9800000000)
அனுப்புநர்
ஆ.குமரன்,
15,கங்கை தெரு,
தென்காசி.
பெறுநர்
நியாய விலை கடை பொறுப்பாளர் அவர்கள்,
கடைஎண்: 89,
புதுகிராமம் தெரு,
தென்காசி.
பொருள் :-தொலைபேசி எண்ணை மாற்ற கோரி விண்ணப்பித்தல்
வணக்கம். என் பெயர் ஆகுமரன். என் குடும்ப அட்டை எண்: 123456. என் குடும்ப அட்டையுடன் இணைக்கபட்ட தொலைபேசி எண் தொலைந்து விட்டது. (பழைய எண்: 98000000) ஆகையால் என் குடும்ப அட்டையுடன் என் புதிய தொலைபேசி எண்: 9811111111 இணைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
தென்காசி,
10.1.2025.
இப்படிக்கு
உண்மையுள்ள,
குமரன்.
அனுப்புநர்
முத்துராமன் வி,
35, கங்கை தெரு,
புதுப்பட்டி,
விருதுநகர்.
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி ஆணையர் அலுவலகம்,
விருதுநகர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டி விண்ணப்பித்தல்.
வணக்கம். எங்கள் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலத்தில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது சாலையில் நிற்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
விருதுநகர்,
24.07.2024.
இப்படிக்கு,
முத்துராமன்.
உறைமேல் முகவரி
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள், நகராட்சி ஆணையர் அலுவலகம், விருதுநகர்.
உறைமேல் முகவரி
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள், நகராட்சி ஆணையர் அலுவலகம் திருத்தங்கல்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
அருணாசலம்.
அனுப்புநர்
வி அருணாசலம்,
55, பொன்னகர் தெரு,
திருத்தங்கல் .
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள், நகராட்சி ஆணையர் அலுவலகம், திருத்தங்கல்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: உப்பு தண்ணீர் தொட்டி அகற்ற கோரி விண்ணப்பித்தல்.
வணக்கம் எங்கள் பொன்னகர் தெருவில் 1996-ல் உப்பு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக அது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. அதை சரியாக பராமரிக்காமலும் உபயோக படுத்தாமலும் இருப்பதால் மிக மோசமான நிலையில் உள்ளது. அதை அகற்றினால் தெரு சுத்தமாக இருக்கும். மேலும் எங்கள் தெரு சற்று அகலமாக இருக்கும். எனவே அதை அகற்ற கோரி மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
திருத்தங்கல் ,
30.6.2024.
அனுப்புநர்
வி.முருகன்
15, தேர் வீதி, வீரம்பட்டி,
மதுரை மாவட்டம்.
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை.
பொருள் : எங்கள் ஊரில் பாலம் அமைத்து தர வேண்டி விண்ணப்பித்தல்.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். என் பெயர் முருகன். நான் வீரம்பட்டி என்னும் ஊரில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் தென்னாற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும், அல்லது 30 கி.மீ சுற்றி ஆலடியூரின் பாலம் வழியாக செல்ல வேண்டும்.
உயர்படிப்புக்காக மாணவர்கள், பொருட்களை விற்க விவசாயிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தினமும் நகரத்திற்கு செல்ல வேண்டும். அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட இயலவில்லை. தினமும் நகரத்திற்கு செல்பவர்கள் சுற்றிச் செல்வ முடியாமல் ஆற்றைக் கடந்து செல்கிறார்கள்.
மழைக்காலத்தில் அது மிகவும் சவாலாக உள்ளது. இந்த ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
எனவே எங்கள் ஊர் மக்களின் நலன் கருதி ஆற்றின் மீது ஒரு பாதுகாப்பான பாலம் ஒன்று அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் நடவடிக்கைக்கு எங்கள் ஊர் மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்.
நன்றி.
வீரம்பட்டி,
13.10.2024.
இப்படிக்கு
உண்மையுள்ள,
முருகன்.
உறைமேல் முகவரி
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை-3.
Reference tags:
Tamil kaditham | kaditham eluthum murai | kaditham eluthuvathu eppadi | வங்கி கடிதம் எழுதும் முறை | வங்கி கடிதம் எழுதுவது எப்படி | bank statememt letter in tamil | bank letter writing tamil | bank address change application
Reference Videos:
© 2025. All rights reserved.