Never Stop Learning
நூலகம் வேண்டி விண்ணப்பம் எழுதுக
(click heading to learn how to read)
நூல் நிலையம் அமைக்க வேண்டி ஊர்ப்பொதுமக்களின் கூட்டு விண்ணப்பம்
அனுப்புநர்
ஊர்ப்பொது மக்கள்,
மானூர்,
திருநெல்வேலி மாவட்டம்.
பெறுநர்
மாவட்ட நூலக அலுவலர்,
திருநெல்வேலி மாவட்டம்.
பொருள்:
நூல் நிலையம் அமைக்க வேண்டி விண்ணப்பித்தல்
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். திருநெல்வேலி மாவட்டம், மானூர் கிராமத்தில் மூவாயிரம் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் எழுத்து அறிவு உடையவர்கள். அதனால் தங்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு நூலகம் வேண்டும் என விரும்புகிறார்கள். நூலகம் அமைப்பதற்குத் தேவையான இடமும் கிராமத்தில் உள்ளது. ஆகவே, அறிவை விரிவு செய்யும் நூலகத்தை எங்களுக்கு விரைவில் அமைத்து தர வேண்டுகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப்பொது மக்கள்,
மானூர் கிராமம்,
திருநெல்வேலி.
மானூர்,
24-5-2022.
நூல் அனுப்பக் கோரி விண்ணப்பம்:-
அனுப்புநர்
அ. நிறைமதி,
எட்டாம் வகுப்பு,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
காஞ்சிபுரம்.
பெறுநர்
மேலாளர் அவர்கள்,
திருவள்ளுவர் புத்தக பண்ணை,
சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : திருக்குறள் தெளிவுரை நூல்-பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுதல்- சார்பாக.
வணக்கம். தங்கள் பதிப்பகம் வெளியிட்டு உள்ள திருக்குறள் தெளிவுரை, நாற்பது நூல்கள் தேவைப்படுகின்றன. நூல் ஒன்றுக்கு ரூபாய் இருபது வீதம் நாற்பது நூல்களுக்கு உரிய தொகை ரூபாய் எண்ணூற்றுக்கான வரைவோலையை இத்துடன் இணைத்துள்ளேன்.
தங்கள்,
அ.நிறைமதி.
இணைப்பு
வரைவோலை எண் : 563710
இந்தியன் வங்கி
நாள் : 26.08.2022
இடம் : காஞ்சிபுரம்.
உறைமேல் முகவரி
பெறுநர்:-
மேலாளர் அவர்கள்,
திருவள்ளுவர் புத்தக பண்ணை,
சென்னை - 2.


அனுப்புநர்
வி.ராஜன்,
ஆறாம் வகுப்பு ஆ பிரிவு,
விவேகானந்தர் மேல் நிலைப் பள்ளி,
காமராஜர் சாலை,
தேனி.
பெறுநர்
மேலாளர் அவர்கள்,
சூரியா பதிப்பகம்,
திருநெல்வேலி.
பொருள் :- கட்டுரைக் கரும்பு ' நூல் வேண்டி விண்ணப்பித்தல்.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம், நான் விவேகானந்தர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆ பிரிவில் படிக்கிறேன். எங்கள் வகுப்பில் முப்பது மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு தங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள "கட்டுரைக் கரும்பு என்னும் நூல் தேவைப்படுகிறது. எனவே முப்பது புத்தகங்களை மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான பணம் ரூ 1000/- த்தை பணவிடை மூலம் அனுப்பியுள்ளேன்.
நன்றி
தேனி,
25.01.2025.
ஆறாம் வகுப்பு
இப்படிக்கு,
வி.ராஜன்.
உறைமேல் முகவரி
பெறுநர்
மேலாளர் அவர்கள்,
சூரியா பதிப்பகம்,
திருநெல்வேலி.
அனுப்புநர்
வி.கதிர்,
15. கங்கை தெரு,
வீரவநல்லூர்.
பெறுநர்
கண்ணன் புத்தகம் நிலையம்,
16, திருவனந்தபுரம் ரோடு, திருநெல்வேலி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: புத்தகங்களை அனுப்பக் கோருதல்
வணக்கம். நான் தங்களது நிலையத்திலிருந்து சில புத்தகங்களை வாங்கி படிக்க விரும்புகிறேன். எனவே கீழே குறிப்பிட்டுள்ள புத்தகங்களை மேலே குறிப்பிட்டுள்ள என் முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புத்தகங்களுக்குரிய தொகையை எப்போதும் போல பார்வைக் காசோலை மூலம் அனுப்பியுள்ளேன்.
நன்றி.
புத்தகப்பட்டியல்
1. பஞ்சதந்திர கதைகள் - 1 பிரதி
2. தமிழ் எழுத்து பயிற்சி - 5 பிரதி
3. தமிழ் பொதுக்கட்டுரை - 2 பிரதி
வீரவநல்லூர்,
5.4.2024.
தங்கள் உண்மையுள்ள,
கதிர்.
உறை மேல் முகவரி
பெறுநர்
கண்ணன் புத்தகம் நிலையம்,
16, திருவனந்தபுரம் ரோடு, திருநெல்வேலி.
அனுப்புநர்
வி. மணிமேகலை,
விவேகானந்தர் மேல்நிலைப் பள்ளி,
எழில் நகர்,
வேலூர்-4.
பெறுநர்
பதிப்பாளர் அவர்கள்,
திருவள்ளுவர் பதிப்பகம்,
சென்னை-8.
மதிப்பிற்குரிய அம்மா / ஐயா,
பொருள்: எம் பள்ளிக்கு தேவையான புத்தகங்களை அனுப்புதல் தொடர்பாக
வணக்கம். நான் வேலூரிலுள்ள விவேகானந்தர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியின் மாணவர் சங்கத் தலைவராகவும் உள்ளேன் இந்த வருடம் எம் பள்ளி நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வாங்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் சில தேவைப்படுகின்றது எனவே கீழே குறிப்பிட்டுள்ள புத்தகங்களை மேலே குறிப்பிட்டுள்ள என் பள்ளி முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். புத்தகத்திற்கு உண்டான தொகையை வங்கி காசோலையாக அனுப்பி வைக்கிறேன். நன்றி
புத்தகப்பட்டியல்
1. தெனாலிராமன் கதைகள் - 4 பிரதிகள்
3. தமிழ் பொதுக் கட்டுரை - 2 பிரதிகள்
3. பாரதியார் கவிதைகள் - 1 பிரதி
4. அறிவியல் அகராதி - 1 பிரதி
5. அறிவியல் கலைக்களஞ்சியம் - 2 பிரதிகள்
வேலூர்,
20.10.2024.
இப்படிக்கு,
மணிமேகலை
உறைமேல் முகவரி :-
பெறுநர்
பதிப்பாளர் அவர்கள்,
திருவள்ளுவர் பதிப்பகம்,
அசோக் நகர்,
சென்னை-8.
ஒன்பதாம் வகுப்பு கடிதம்
அனுப்புநர்
ஊர் பொதுமக்கள்,
சின்னம் பாளையம்,
பொள்ளாச்சி வட்டம்,
கோவை மாவட்டம்.
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சியல் அலுவலகம்.
கோவை மாவட்டம்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: எங்கள் கிராமத்தில் நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்-சார்பு.
பொள்ளாச்சி வட்டாட்சியர் எல்லைக்குட்பட்டது எங்கள் கிராமம். மொத்த மக்கள் தொகை 8,000. கல்வி கற்றவர் 50 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளனர். படித்த, படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 750 க்கு மேல். ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு வாய்ப்பில்லை. பொது அறிவைத் தெரிந்து கொள்ளவும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து நகர்புற மாணவர்களுக்கு இணையாக நாங்களும் போட்டித் தேர்வுகள் எழுதவும் வேண்டியுள்ளது. எனவே, கற்றவர்களின் பொது அறிவுத் திறன் வளரவும், நேரத்தைப் பயனுள்ளதாக்கவும் நூலகம் ஒன்று தேவைப்படுகிறது. ஆகையால் நூலக வசதி ஏற்படுத்தித் தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
சின்னம்பாளையம்
30.9.23.
இப்படிக்கு
உண்மையுள்ள,
ஊர் பொதுமக்கள்.
உறைமேல் முகவரி:-
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கோவை 641001.
Tamil kaditham | கடிதம் எழுதும் முறை | கடிதம் எழுதுவது எப்படி | Kaditham eluthuvathu eppadi | Kaditham eluthum murai | aluvalaga Kaditham in Tamil | அலுவலக கடிதம் | letter writing in Tamil | tholil murai Kaditham in Tamil | aalu wala Kaditham | formal letter in Tamil | pukaar Kaditham in Tamil | நூலகம் வேண்டி விண்ணப்பம் | noolagam vendi vinnappam
Reference tags:
Reference videos:
© 2025. All rights reserved.