Never Stop Learning
எங்கள் ஊர் | Engal Oor | 7th standard tamil katturai
(Click the heading to learn to read)
முன்னுரை
எங்கள் ஊர் தஞ்சாவூர். தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமான தஞ்சாவூரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்
காவிரி ஆற்றின் துணை ஆறான வெண்ணாறு ஆற்றின் கரையில் தஞ்சாவூர் அமைந்துள்ளது.
பெயர்காரணம்
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையர் பெயரையே, இந்நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்றானது.
தொழில்கள்
தஞ்சையில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு பட்டு சேலைகளும் இசைக்கருவிகளும் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.
சிறப்பு மிகு இடங்கள்
தஞ்சைப் பெரிய கோவில், சரசுவதிமகால் நூலகம், கல்லணை, தஞ்சை அரண்மனை, பூண்டி மாதா கோவில் முதவியவை சிறப்பு மிகு இடங்களாகும்.
திருவிழாக்கள்
தஞ்சைப் பெரிய கோவில் சித்திரை திருவிழா, முத்துப்பல்லக்குத் திருவிழா மற்றும் காவிரி ஆற்றங்கரையில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மக்கள் ஒற்றுமை
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
முடிவுரை
'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் தஞ்சாவூரைப் பாதுகாப்பது எனது கடமை.
எங்கள் ஊர்
தஞ்சாவூர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை
எங்கள் ஊர் ஓசூர். லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் ஓசூரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்
ஒசூர் பொன்னையார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
பெயர்காரணம்
ஓசூர் என்பதன் பொருள் புதூர் [புதிய ஊர்] என்பதாகும்.
தொழில்கள்
இந்நகரில் இயந்திரத்தொழில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஓசூரைச் சுற்றி பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
சிறப்பு மிகு இடங்கள்
ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா கோவில், ராஜாஜி நினைவிடம், ராம நாய்க்கன் ஏரி மற்றும் பூங்கா முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்
ஆடி மாதத்தில் நடைபெறும் கோட்டை மாரியம்மன் திருவிழா மற்றும் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவிலின் தேர் திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றன.
முடிவுரை
பழங்கள், காய்கறிகள், மலர்கள், கால்நடைகள் தொழிற்சாலைகள் என அனைத்துக்கும் பெயர் பெற்ற ஓசூரில் வாழ்வது எனக்கு பெருமை.
எங்கள் ஊர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
மக்கள் ஒற்றுமை
திருவிழாக்கள்
முடிவுரை
முன்னுரை
எங்கள் ஊர் காரைக்குடி. தமிழுக்கு கோவில் கட்டிய காரைக்குடி நகரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்
சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது காரைக்குடி.
பெயர்காரணம்
காரைச் செடிகள் மிகுதியாக இருந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாறியதால் காரைக்குடி எனப் பெயர் பெற்றது.
தொழில்கள்
காரைக்குடி தனித்துவமான கட்டிடக்கலை, சுவைமிக்க உணவு மற்றும் விவசாயத்திற்கு பெயர் பெற்றது.
சிறப்பு மிகு இடங்கள்
முத்து மாரியம்மன் கோவில், தமிழ்தாய் கோவில், குன்றக்குடி முருகன் கோவில், ஆயிரம் ஜன்னல் வீடு, செட்டிநாடு அரண்மனை, கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா, கம்பன் திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றன.
முடிவுரை
செட்டிநாட்டு கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைக்கும் ஒரு சின்னமாக இருக்கும் காரைக்குடியைப் பாதுகாப்பது எனது கடமை.
எங்கள் ஊர்
காரைக்குடி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
எங்கள் ஊர்
கிருஷ்ணகிரி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்க் காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:-
எங்கள் ஊர் கிருஷ்ணகிரி. மாம்பழங்களின் சொந்த ஊரான கிருஷ்ணகிரியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:-
கிருஷ்ணகிரி நகர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
பெயர்காரணம்:-
`கிருஷ்ணா' என்பது 'கருப்பு' என்றும் 'கிரி' என்பது 'மலை' என்றும் குறிக்கிறது. கருப்பு பாறைகள் உள்ள மலைகளுடன் அமைந்துள்ளதால் கிருஷ்ணகிரி என வழங்கப்பட்டுள்ளது.
தொழில்கள்:-
இங்கு விவசாயம் முக்கிய தொழில் ஆகும். இங்கு உள்ள மலைகளில் இருந்து கிரானைட் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சிறப்பு மிகு இடங்கள்:-
ஸ்ரீ பார்ஷ்வா பத்மாவதே சக்திபீட் தீர்த்த தாம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி கோட்டை, தளி பள்ளதாக்கு முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:-
மாங்கனி திருவிழா, பேட்டராய சுவாமி தேர் திருவிழா, சுப்பிரமணிய சுவாமி தைப்பூச திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்கள்.
மக்கள் ஒற்றுமை:-
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
முடிவுரை:-
வளமான வரலாற்றையும் கலாச்சார பாரம்பரியம் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழ்வது எனக்கு பெருமை.
எங்கள் ஊர்
புதுக்கோட்டை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:-
எங்கள் ஊர் புதுக்கோட்டை. தொண்டைமான் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட புதுக்கோட்டை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:-
புதுக்கோட்டை நகரம் வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்:-
தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியை, புதுக்கோட்டை சமஸ்தானம் என்று அழைக்கப்பட்டது.
தொழில்கள்:-
இந்நகரத்தின் முக்கிய தொழில் விவசாயம். முந்திரி மற்றும் கோடைக்கால பயிர்கள் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.
சிறப்பு மிகு இடங்கள்:-
சித்தன்னவாசல், அரசு அருங்காட்சியகம், திருமயம் கோட்டை, புதுக்குளம், புதுக்கோட்டை அரண்மனை முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:-
முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா, கோகர்ணேஸ்வரர் கோவில் சித்திரை மாத திருவிழா, அய்யனார் கோவில் மாசி மகத் திருவிழா முதலியவை இங்கு சிறப்பாகக் கொண்டாப்படும்.
மக்கள் ஒற்றுமை:-
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
முடிவுரை:-
தொல் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும் புதுக்கோட்டையை பாதுகாப்பது எங்கள் கடமை.
எங்கள் ஊர்
சிவகாசி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
முடிவுரை
முன்னுரை:-
எங்கள் ஊர் சிவகாசி. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி நகரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:-
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி நகரம் அமைந்துள்ளது.
பெயர்காரணம்:-
ஹரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னன் காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து இங்கு நிறுவினார். காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது.
தொழில்கள்:-
சிவகாசி பட்டாசு தொழிலுக்கும், அச்சு தொழிலுக்கும் மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலுக்கும் புகழ்பெற்ற ஊராகும்.
சிறப்பு மிகு இடங்கள்:-
பத்ரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் முதலியவை சிறப்பு மிகு இடங்கள்.
திருவிழாக்கள்:-
பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை:-
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்
முடிவுரை:-
வணிக நகரமான சிவகாசியில் வாழ்வது எனக்கு பெருமை.
எங்கள் ஊர்
திருச்செங்கோடு
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:-
எங்கள் ஊர் திருச்செங்கோடு. 'இந்தியாவின் போர்வெல் மையம்' என்று அழைக்கப்படும் எங்கள் ஊரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:-
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பெயர்க்காரணம்:-
இங்குள்ள மலை செந்நிறத்தில் உள்ளதால் இவ்விடம் திருச்செங்கோடு எனப்பெயர் பெற்றது.
தொழில்கள்:-
ஆழ்துளை கிணறு வெட்டும் வண்டியை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். விசைத்தறிக் கூடங்கள், லாரி மற்றும் பேருந்து கூடு கட்டும் தொழில், விவசாயம் ஆகியவை அதிக அளவில் உள்ளன.
சிறப்பு மிகு இடங்கள்:-
அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவில், கந்தசுவாமி கோவில் முதலியவை சிறப்பு மிகு இடங்கள்.
திருவிழாக்கள்:-
அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா, அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோவில் திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை:-
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்
முடிவுரை:-
தனக்கென்று தனி பெருமை உடைய திருச்செங்கோடு ஊரில் வாழ்வது எனக்கு பெருமை.
எங்கள் ஊர்
தென்காசி
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:-
எங்கள் ஊர் தென்காசி. சாரல் மழைக்கு பெயர் போன, இயற்கை எழில் பொங்கும் தென்காசியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:-
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்நகரம்.
பெயர்க்காரணம்:-
பராக்கிரம பாண்டியன் மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான் வடக்கே இருக்கும் காசி போல் தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டுமாறு ஆணையிட்டார். இதனால் இவ்வூர் அந்த கோவிலின் பெயராலேயே தென்காசி என்று அழைக்கப்படுகிறது.
தொழில்கள்:-
தென்காசி விவசாயத் தொழிலுக்கு பெயர் பெற்றது. இங்கு பல மரக்கடைகளும், மரம் இழைக்கும் தொழிற்சாலைகள் காணலாம்.
சிறப்பு மிகு இடங்கள்:-
அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோவில், குண்டாறு அணை, குற்றால அருவிகள் முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:-
சித்திரை விசுத் திருவிழா, ஐப்பசி விசுத் திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
மக்கள் ஒற்றுமை:-
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
முடிவுரை:-
அழகான மலைகள், அருவிகள், அணைகள் கொண்ட தென்காசி நகரை பாதுகாப்பது எங்கள் கடமை.
எங்கள் ஊர்
வேலூர்
குறிப்பு சட்டகம்
முன்னுரை
அமைவிடம்
பெயர்காரணம்
தொழில்கள்
சிறப்பு மிகு இடங்கள்
திருவிழாக்கள்
மக்கள் ஒற்றுமை
முடிவுரை
முன்னுரை:-
எங்கள் ஊர் வேலூர். ஆங்கிலேயர்களை எதிர்த்து வேலூர் சிப்பாய் எழுச்சி நடைப்பெற்ற இம்மண்ணின் சிறப்பை இக்கட்டுரையில் காண்போம்.
அமைவிடம்:-
பாலாற்றின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்:-
முருகக் கடவுள் தோன்றிய ஊர் என்பதால் வேலூர் என்று அழைக்கப்படுகிறது.
தொழில்கள்:-
தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத்துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்கு அளிக்கிறது.
சிறப்பு மிகு இடங்கள்:-
வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவரர் கோவில், பொற்கோவில் முதலியவை சிறப்பு மிகு இடங்கள் ஆகும்.
திருவிழாக்கள்:-
கங்கை அம்மன் திருவிழா, சித்திரை பௌர்ணமியில் புஷ்ப பல்லக்கு விழா, வேலங்காடு ஏரி திருவிழா முதலியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்
மக்கள் ஒற்றுமை:-
இங்கு வாழ் மக்கள் பல இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
முடிவுரை:-
கலாச்சார பாரம்பரியம், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகு மிக்க வேலூர் நகரில் வாழ்வது எனக்கு பெருமை.
TTamil katturai | தமிழ் கட்டுரை | katturai eluthum murai | katturai eluthuvathu eppadi | கட்டுரை எழுதுவது எப்படி | கட்டுரை எழுதும் முறை | எங்கள் ஊர் கட்டுரை | 7th standard Engal oor katturai
Reference tags:
Reference videos:
© 2025. All rights reserved.